Skip to main content

Posts

Showing posts from June, 2026

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் tamil RC songs

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம்  அவர் பலியினில் கலந்திட  அவர் ஒளியினில் நடந்திட  சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்  தோள்களில் நம்மை தாங்குவார்  துயரினில் அவர் தேற்றுவார்  சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார்  ஆவியால் நம்மை நிரப்புவார்  அமைதியை என்றும் அருளுவார்  ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்  விடியலின் கீதமாக முழங்குவார்  விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்  வாருங்கள்..........

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா பாடல் வரிகள் | அன்னை மரியாள் பக்திப் பாடல்

 உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா உலகாளும் தாயே அருள் தாருமம்மா (1) முடமான மகனை நடமாட வைத்தாய்  கடல் நீரில் தவித்த கப்பலைக் காத்தாய் -2 பால் கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய்  பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய்-2 (2) கடல் நீரும் கூட உன் கோயில் காண  அலையாக வந்து உன் பாதம் சேரும் -2 அருள் தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம்  அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா-2 உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா, அன்னை மரியாள் பாடல் வரிகள், வேளாங்கண்ணி அன்னை பாடல், Tamil Christian Song Lyrics, Annai Mary Songs Tamil, Catholic Devotional Songs Tamil, Marian Devotional Songs, Tamil Christian Lyrics, அன்னை பக்தி பாடல்கள், வேளாங்கண்ணி பாடல்கள். #உம்மைதேடிவந்தேன் #சுமைதீருமம்மா #அன்னைமரியாள் #வேளாங்கண்ணிஅன்னை #TamilChristianSongs #ChristianSongLyrics #MarianSongs #CatholicSongs #TamilDevotionalSongs #AnnaiMarySongs #TamilChristian #ChristianMusic #VelankanniMatha #TamilLyrics #ChristianWorshipSongs

இடைவிடா சகாயமாதா இணையில்லாத தேவ மாதா! Madha song

இடைவிடா சகாயமாதா இணையில்லாத தேவ மாதா பாவவினை தீர்ப்பாய்  பதம் எமை சேர்ப்பாய்  நிதம் துணை சேர்ப்பாய் (1) ஆறாத மனப் புண்ணை ஆற்றிடுவாய் அன்னை தீராத துயர் தன்னை தீர்த்திடுவாய் -2 மாறாத கொடுமை தீராத வறுமை  தானாக என்றுமே மாற்றிடுவாய் -2 (2) கள்ள கபடின்றி கடுகளவு பயமின்றி உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2  வெள்ளிபோல அவள் கருணை பாய்ந்திட  தேனூறும் வான் வாழ்வு தந்திடுவாய் -2

இரவு நேர நன்றியின் ஜெபம் | அமைதியான உறக்கத்திற்கான ஜெபம்

நம்பிக்கையின் இறைவா!   இந்த நாள் முழுவதும் என்னை பாதுகாத்து வழிநடத்தினீர். என் தேவைகளை அறிந்து உதவி புரிந்தீர் .உமக்கு நன்றி கூறுகின்றேன் .இந்த நாளில் என் உழைப்பை ஆசீர்வதித்தீர் நான் சந்தித்த மனிதர்கள் நான் செய்த பணிகளில் மனநிறைவை எனக்கு தந்தீர் உமக்கு நன்றி. இந்த இரவில் நான் அமைதியோடும் மனநிம்மதியோடும் உறங்க நல் உறக்கத்தை தாரும் .எனக்கு முன்னும் பின்னும் இடமும் வலமும் உம் வானத்தூதர்களை நிறுத்தி பாதுகாத்தருளும் புதிய நாளை காண செய்தருளும். ஆமென். இரவு ஜெபம், Night Prayer Tamil, உறங்குவதற்கு முன் ஜெபம், இரவு நேர நன்றியின் ஜெபம், Tamil Christian Prayer, அமைதியான உறக்க ஜெபம், தினசரி இரவு ஜெபம். Hashtags: #இரவுஜெபம் #NightPrayer #TamilPrayer #DailyPrayer #ChristianPrayer #TamilJebam #JesusPrayer #PrayerBeforeSleep #GoodNightPrayer #இயேசுகிறிஸ்து #ஜெபமாலை #TamilChristian #PrayerInTamil #BedtimePrayer #NightBlessings

வல்லமையுள்ள புனித அந்தோனியார் ஜெபம்#St Antony's Powerful prayer#Jesus#Bible

  கோடி அற்புதரான புனித அந்தோனியாரே வேண்டும் வரத்தை தட்டாமல் தருகின்ற புனிதரே எங்களின் துன்ப துயரங்களில் ஆதரவு கரம் தருபவரே உம்மையே நம்பி வந்தோம் உம் தயையை கேட்டு வந்தோம் இறைவாக்கு உரைக்கும் வல்லமை பெற்றவரே நாங்கள் இறைவார்த்தையின்படி வாழச செய்தருளும் காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்து தருபவரே நாங்கள் தொலைத்துவிட்டு அவதிப்படுகின்ற பொருட்களை கண்டெடுத்து தாரும் சாத்தானின் சோதனைகளில் விழுந்து தவிக்கிறோம் எங்களை கரம் பிடித்து தூக்கி எழுப்பிவிடும் அழியா நாவுடைய புனிதரே இறைமகன் இயேசுவிடம் எங்களுக்காய் பரிந்து பேசி எங்கள் வாழ்வையும் ஆன்மாவையும் நாங்கள் அழியாமல் என்றென்றும் காத்துக்கொள்ள உம் அருள் உதவியை வேண்டி ஜெபிக்கின்றோம் அருள் புரியும் பரிந்து பேசும் - ஆமென்

காலை நேர ஆசீர்வாத ஜெபம் | புதிய நாளுக்கான நன்றியின் ஜெபம்

அன்பும் இரக்கமும் நிறைந்த பரலோகத் தந்தையே, உம்மை முழு இதயத்தோடு துதித்து மகிமைப்படுத்துகிறோம். ஆண்டவரே, இந்த புதிய நாளை எங்களுக்கு அருளியதற்காக உமக்கு நன்றியை செலுத்துகிறோம். பாதுகாப்பாக எழுந்து இந்த நாளைக் காணச் செய்த உமது கிருபைக்காக எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறோம். கர்த்தாவே, இன்று நடைபெறவிருக்கும் எங்கள் எல்லா செயல்களையும், திட்டங்களையும், பொறுப்புகளையும் உமது கரங்களில் ஒப்படைக்கிறோம். எங்கள் பாதைகளை நேராக நடத்தி, ஒவ்வொரு முடிவிலும் உமது ஞானத்தை அருளும். இந்த ஜெபத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொருவரையும், அவர்களின் குடும்பங்களையும் ஆசீர்வதியும். அவர்களின் இல்லங்களில் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை நிலைத்திருக்க அருள் செய்யும். ஆண்டவரே, புதிய கிருபைகளாலும், உமது அன்பாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையாலும் எங்களை நிரப்பும். ஆன்மீக வளர்ச்சிக்கும், விசுவாச வாழ்க்கைக்கும் தேவையான வரங்களையும் ஆசீர்வாதங்களையும் அருளும். இன்று முழுவதும் எங்களை பாதுகாத்து வழிநடத்தும். எல்லா தீமைகளிலிருந்தும் காத்து, உமது சமாதானத்தால் சூழ்ந்திருக்கும். எங்கள் தேவைகள் அனைத்தையும் உமது நேரத்தில் ...

குடும்ப சமாதான ஜெபம் | Family Prayer Tamil

ஜெபக் குறிப்பு: குடும்பங்களில் சமாதானமும் அன்பும் நிலைக்க ஜெபிப்போம் அன்பின் இயேசுவே, உம்மை நன்றியுள்ள இதயத்தோடு துதித்து மகிமைப்படுத்துகிறோம். ஆண்டவரே, ஒவ்வொரு கணவன்-மனைவியையும் உமது அன்பான கரங்களில் ஒப்படைக்கிறோம். அவர்களின் உறவுகளை உமது கிருபையால் பாதுகாத்து ஆசீர்வதியும். கர்த்தாவே, கருத்து வேறுபாடுகள், மனக்கசப்புகள் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி, உமது சமாதானம் அவர்களின் இதயங்களில் நிறையட்டும். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் மனதையும், மதிக்கும் குணத்தையும், விட்டுக்கொடுத்து வாழும் அன்பையும் அருளும். தவறுகளை மன்னித்து, புதிய தொடக்கத்தை உருவாக்கும் மனப்பக்குவத்தை வழங்கும். ஆண்டவரே, குடும்பத்தை ஞானமாக வழிநடத்த தேவையான அறிவையும் விவேகத்தையும் அருளும். அவர்களின் வார்த்தைகளிலும் செயல்களிலும் அன்பும் பொறுமையும் வெளிப்படட்டும். பொருளாதாரம், வேலை, உறவுகள் அல்லது வேறு எந்த காரணத்தினாலும் ஏற்பட்டிருக்கும் பதற்றங்கள் அனைத்தும் நீங்கி, குடும்பங்களில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலைத்திருக்க கிருபை செய்யும். உமது பிள்ளைகளின் உழைப்பை ஆசீர்வதித்து, அவர்கள் மேற...

குழந்தை வரம் வேண்டி ஜெபம் | Pregnancy Prayer Tamil

இன்றைய ஜெபக் குறிப்பு: குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் தம்பதிகளுக்காக ஜெபிப்போம் அன்பின் இயேசுவே, உம்மை நன்றியுள்ள இதயத்தோடு துதித்து மகிமைப்படுத்துகிறோம். ஆண்டவரே, குழந்தை வரத்திற்காக ஏக்கத்தோடும் நம்பிக்கையோடும் காத்திருக்கும் ஒவ்வொரு கணவன்-மனைவியையும் உமது அன்பான கரங்களில் ஒப்படைக்கிறோம். அவர்களை உமது கிருபையால் நிரப்பி ஆசீர்வதியும். கர்த்தாவே, நீண்ட நாட்களாக காத்திருப்பதால் அவர்களின் மனதில் ஏற்பட்டிருக்கும் சோர்வு, வேதனை, கவலை மற்றும் ஏமாற்றங்களை நீக்கி, புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அருளும். ஆண்டவரே, ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் மனித இயல்பின்படி சாத்தியமற்றதாகத் தோன்றிய சூழ்நிலையிலும் அற்புதம் செய்து ஈசாக்கை அருளினீர். அதுபோல இன்று உம்மை நம்பி காத்திருக்கும் தம்பதிகளின் வாழ்க்கையிலும் அற்புதங்களை நிகழ்த்தும். மருத்துவ அறிக்கைகள், வயது, சூழ்நிலைகள் அல்லது மனிதர்களின் கருத்துக்கள் எந்தத் தடையாக இருந்தாலும், உமது வல்லமைக்கு முன்பாக அனைத்தும் விலகிப் போகட்டும். குழந்தை வரம் வேண்டி ஜெபிக்கும் குடும்பங்களில் மகிழ்ச்சியின் செய்தி விரைவில் கேட்கப்படட்டும். ஆண்டவரே, அவமானம், கே...

கடன் சுமை நீங்க ஜெபம்| Loan Prayer 🙏🏻

இன்றைய ஜெபக் குறிப்பு : கடன் சுமைகளில் இருந்து விடுதலை பெற ஜெபிப்போம் அன்பின் இயேசுவே, உம்மை நன்றியுள்ள இதயத்தோடு துதித்து மகிமைப்படுத்துகிறோம். ஆண்டவரே, இன்று கடன் சுமைகளாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் சோர்ந்து போயிருக்கும் உமது பிள்ளைகள் அனைவரையும் உமது அன்பான கரங்களில் ஒப்படைக்கிறோம். கர்த்தாவே, அவர்கள் பெற்றுள்ள கடன்களை அடைக்க தேவையான வருமான வாய்ப்புகளையும் புதிய ஆசீர்வாதத்தின் கதவுகளையும் திறந்து அருளும். அவர்களின் வாழ்க்கையில் நிதி முன்னேற்றம் ஏற்பட்டு, கடன் சுமைகளிலிருந்து விடுதலை பெற கிருபை செய்யும். கல்விச் செலவுகள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் தேவைகளை சந்தித்து ஆசீர்வதியும். அவர்களின் கண்ணீரையும் கவலைகளையும் மகிழ்ச்சியாக மாற்றும். ஆண்டவரே, உமது பிள்ளைகளின் உழைப்பை ஆசீர்வதித்து, அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் நல்ல பலன்களைத் தரச் செய்யும். அவர்கள் சம்பாதிக்கும் வருமானத்தை ஞானமாக நிர்வகிக்கவும், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும் தேவையான அறிவையும் விவேகத்தையும் அருளும். வங்கி கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் ப...

பணக்கஷ்டம் நீங்க ஜெபம் | Financial Breakthrough Prayer Tamil

இன்றைய ஜெபக் குறிப்பு : பொருளாதார சிரமங்களில் இருக்கும் பிள்ளைகளுக்காக ஜெபிப்போம் அன்பான இயேசுவே, உம்மை நன்றியுள்ள இதயத்தோடு துதித்து மகிமைப்படுத்துகிறோம் . ஆண்டவரே, பொருளாதார சிரமங்களாலும் கடன் பாரங்களாலும் கவலையில் இருக்கும் உமது பிள்ளைகள் அனைவரையும் உமது அன்பான கரங்களில் ஒப்படைக்கிறோம். அவர்களின் ஒவ்வொரு தேவையையும் நீர் அறிந்திருக்கிறீர். அவர்களின் வாழ்க்கையில் தேவையான ஆசீர்வாதங்கள் நிறைவாகக் கிடைக்க கிருபை செய்யும். கர்த்தாவே, மருத்துவச் செலவுகள், குடும்பப் பொறுப்புகள், கல்விச் செலவுகள் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு தேவையான உதவிகளையும் வாய்ப்புகளையும் அருளும். வேலைவாய்ப்பு, தொழில், வியாபாரம் மற்றும் வருமான வழிகளில் உமது ஆசீர்வாதம் பெருகட்டும். அவர்களின் உழைப்பை ஆசீர்வதித்து, அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் நல்ல பலன்களை அளித்தருளும். ஆண்டவரே, வறுமை, பற்றாக்குறை, மன அழுத்தம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் விலகிப் போகட்டும். அதற்கு பதிலாக சமாதானம், வளம், முன்னேற்றம் மற்றும் நம்பிக்கை அவர்களின் வாழ்க்கையில் பெருகட்டும். உமது பிள்ளை...

திருமண தடை நீங்கி ஆசீர்வாதமான வாழ்க்கை அமைய ஜெபம்

இன்றைய ஜெபக் குறிப்பு: திருமண தடை நீங்கி நல்ல துணை கிடைக்க ஜெபிப்போம் அன்பின் இயேசுவே, உம்மை முழு இதயத்தோடும் நன்றியோடும் துதிக்கிறோம். ஆண்டவரே, திருமணத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொரு மகனையும் மகளையும் உமது அன்பான கரங்களில் ஒப்படைக்கிறோம். வயது அதிகரித்து வருவதால் கவலையிலும் ஏக்கத்திலும் இருக்கும் அனைவருக்கும் உமது ஆறுதலையும் நம்பிக்கையையும் அருளும். இயேசுவே, அவர்களின் திருமணத்திற்கு தடையாக இருக்கும் எல்லா சூழ்நிலைகளும் உமது வல்லமையால் விலகிப் போகட்டும். குடும்ப பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் பிற தடைகள் அனைத்தும் நீங்கி, நல்ல முடிவுகள் உருவாக அருள் புரியும். தேவைகள் நிறைவேறாமல் தாமதமாகிக் கொண்டிருக்கும் திருமணங்கள் அனைத்தும் உமது கிருபையால் நிறைவேறட்டும். தேவையான வேலைவாய்ப்பு, வருமானம், வீடு மற்றும் பிற ஆசீர்வாதங்கள் கிடைத்து, சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்த குடும்ப வாழ்க்கை அமைய வழிநடத்தும். வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் முயற்சிகளை ஆசீர்வதித்து, அவர்களுக்கு ஏற்ற நல்ல வேலைவாய்ப்புகளைத் திறந்து கொடும். அவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்து, திருமண வாழ...

வேலை தேடி காத்திருப்போருக்கான சக்திவாய்ந்த ஜெபம் | Job Prayer in Tamil

வேலை கிடைக்க ஆண்டவரிடம் செய்யும் ஜெபம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களுக்கு நீர் அருளிய இரட்சிப்பிற்காகவும், உமது அளவற்ற அன்பிற்காகவும் நன்றி. உண்ண உணவு, உடுத்த உடை, தங்க இடம் ஆகிய அனைத்தையும் கொடுத்து எங்களை ஆசீர்வதித்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். தகப்பனே, இந்த நேரத்தில் வேலைக்காக காத்திருக்கிற ஒவ்வொரு சகோதரனையும் சகோதரியையும் உமது பரிசுத்த கரங்களில் ஒப்படைக்கிறோம். உமது வார்த்தையில்,"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தட்டுங்கள், திறக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்" என்று சொல்லியிருக்கிறீர். ஆண்டவரே, பல ஆண்டுகள் படித்து, உழைத்து, பல நேர்முகத் தேர்வுகளை சந்தித்து, இன்னும் வேலைக்காக காத்திருக்கிறவர்களை நினைத்து ஜெபிக்கிறோம். அவர்களின் கண்ணீரையும், போராட்டங்களையும், எதிர்பார்ப்புகளையும் நீர் அறிந்திருக்கிறீர். கர்த்தாவே, வருகிற நாட்களில் அவர்களுக்கு ஏற்ற நல்ல வேலைவாய்ப்புகளை அருளும். அவர்களின் தேவைகளை சந்தித்து, உள்ளத்தின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றும். எந்த மனிதனாலும் மூட முடியாத ஒரு திறந்த வாசலை அவர்கள...

இறையாட்சியின் மனிதர்கள் பாடல் வரிகள் | கிறிஸ்தவ ஆன்மீக பாடல் | Tamil Christian Song Lyrics

இறையாட்சியின் மனிதர்களே  மரிமைந்தனின் சீடர்களே  இறை அழைக்கின்றார் அன்பில் இணைக்கின்றார்  புது உலகொன்றைப் படைத்திட வாருங்களே நாம் வாழும் இந்த பூமி நலமாகிட வேண்டாமா? நலவற்றவர் வாழ்வினில் நீதி நின்று நிலைத்திட வேண்டாமா? இயேசுவே காட்டிய வழியுண்டு இயங்கிட நமக்கொரு நெறியுண்டு எதிர் நோக்குடன் வாருங்கள் கதி விளைந்திடும் காணுங்கள் இன்று மனித இதயங்களெல்லாம் ஒன்று சேர்ந்திட வேண்டாமா? இறையாட்சியின் மாற்றங்கள் எங்கும் நிறைவேறிட வேண்டாமா? மாநிலம் முழுவதும் ஒரு குடும்பம் மாந்தர்கள் எல்லாம் உடன்பிறப்பே இந்த உண்மையை வாழ்ந்திடுவோம் எந்தப் பகையினும் வென்றிடுவோம்

அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே

அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே அன்பினைத் காத்து அறம் வளர்ப்போமே ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்  அருளொளி வீசும் ஒருவழி போவோம்  பிரிவினை மாய்த்துத் திருமறை காப்போம்  பரிவுள்ள இறைவன் திருவுளம் காண்போம் பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி  பெருமை செய்தாரே புனிதப் பேரன்பை  பிறந்த நம் வாழ்வின் பயன் பெற வேண்டும்  பிறரையும் நமைப்போல் நினைத்திட வேண்டும்

தேர்வு எழுதுவோருக்காக ஜெபம் 🙏| Exam Prayer in Tamil🙏

ஞானத்தின் ஊற்றே இறைவா! எங்களின் இந்த இளம் வயதில் பல நன்மைகளை எங்களுக்கு பொழிந்து வழிநடத்தி வந்த நேரங்களை நன்றியோடு நினைக்கிறோம். எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வுகளை எழுதவிருக்கும் நாங்கள் இந்த இறுதி நாட்களில் எங்கள் பாடங்களை கடின முயற்சியுடன் படித்து தேர்வுகளை சிறப்பாக எழுதி முடிக்கவும் அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும் தேவையான ஞானத்தையும் நினைவாற்றலையும் தெளிந்த மனதையும் உடல் உள்ள வலிமைகளையும் எங்களுக்கு கொடுத்தருளுமாறு உம்மை தாழ்மையோடு வேண்டுகிறோம். ஞானத்தின் இருப்பிடமே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென்

புனித சூசையப்பர் ஜெபம்| St Joseph's Special Prayer

  பொறுமையின் கண்ணாடியும் அமைதியின் தூதுவருமான புனித யோசேப்பே! திருக்குடும்பத்தின் தலைவராகவும் எங்கள் குடும்பத்தின் பாதுகாவலராகவும் இருந்து எங்களைக் காத்து என்றென்றும் வழிநடத்தி எங்களுக்காக இறைமகன் இயேசுவிடத்தில் பரிந்து பேசுபவரே, இம்மாதத்தில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதித்து வியாபாரம் பெருகச் செய்யும் உண்மையோடும் நேர்மையோடும் நாங்கள் உழைக்க எங்களை திட படுத்தி ஊக்கப்படுத்தும். சோதனை காலங்களில் சோர்ந்து விடாமல் கன்னி மரியாயையும் குழந்தை இயேசுவையும் நீர் பாதுகாத்தது போல எங்களையும் வழிநடத்தி உம் வழியில் நாங்களும் நீதியோடு நேர்மையோடு நடக்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். வானத்தூதர் போற்றும் நீதிமானே வாழ்வில் வரும் துன்பங்களை உம்மைப் போல சந்தித்து வெற்றி கொள்ளச் செய்தருளும். - ஆமென்

அர்ப்பண பூக்களை அன்புடன் ஏந்தி |Arpana pookkalai anbudan enthi

அர்ப்பண பூக்களை அன்புடன் ஏந்தி ஆனந்த இல்லம் செல்லுவோம் - அங்கு ஆயிரம் விளக்குகள் பிடித்தில் ஏந்தி அவருக்கு நன்றி சொல்லுவோம் உன் பெரும் கருணை நலன்களைச் சுவைத்தோமே உன் திரு நிழலில் அமைதியை உணர்ந்தோமே தடைகளைக் கடக்க உனதருள் அடைந்தோமே நிறைவான அன்பிது நிதம் உனைத் தொடர்வோமே நிறைவான நன்றியில் உம்மையே புகழ்வோமே உன்னுள் மெழுகியில் பலன்களைச் சுவைத்தோமே உமதிருக் கரத்தின் வலிமையை உணர்ந்தோமே அலையென மேலிடும் துயர்களைக் கடந்தோமே அளவில்லா அன்பிது உன்னைப் பணிந்தோமே நிறைவான நன்றியில் உம்மையே புகழ்வோமே Thanglish  Arpana pookkalai anbudan enthi Aanandha illam selluvom - angu Aayiram vilakkugal pidathil enthi Avarukku nandri solluvom Un perum karunai nalangalai suvaiththome Un thiru nizhalil amaidhiyai unarndhome Thadaigalaik kadakka unadharul adaindhome Niraivaana anbithu nitham unai thodarvome Niraivaana nandriyil ummaiye pugazhvome Unnul mezhugiyil palangalai suvaiththome Umathiru karaththin valimaiyai unarndhome Alaiyena melidum thuyargalaik kadandhome Alavillaa anbithu unnai panindhome Niraivaana ...

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்|"Archanai malaraaga aalayathil varugindrom." 🌸🙏🏻

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம் ஆனந்தமாய்ப் புகழ் கீதம் என்றும் பாடுவோம்  அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட  ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் தாயின் கருவிலே உருவாகும் முன்னரே  அறிந்து எங்களைத் தேர்ந்த தெய்வமே  பாவியாயினும் பச்சப் பிள்ளையாயினும்  அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்  மனிதராக புனிதராக வாழப் பணிக்கின்றீர்  பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர்  அஞ்சாதீர் என்று எம்மைக் காத்து வருகின்றீர் உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்  உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர் உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்.  உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்  அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்தத் திட்டம் தீட்டினீர்  கட்டி எழுப்ப நட்டுவைக்க எம்மை அனுப்பினீர்  அஞ்சாதீர் என்று எம்மைக் காத்து வருகின்றீர் Thanglish Version Archanai malaraaga aalayathil varugindrom Aanandhamaai pugazh geetham endrum paaduvom Arppaniththu vaazhnthida anbar ummil valarnthida Aasaiyodu arul vendi panigin...

புனித ஆரோக்கிய அன்னையை நோக்கி ஜெபம்

  அருள் மழை பொழியும் ஆரோக்கிய தாயே, துன்பப்படுவோரின் துயர் | துடைக்கும் தயை மிகு தாயே, இதோ அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன் | இத்திருத்தலத்தில் கூடியுள்ளோம், உமது வல்லமையுள்ள மன்றாட்டினால் எங்களை காத்தருளும், நாங்கள் எவ்வித தவறிலும் கேட்டிலும் விழாதபடி எங்களை கரம் பிடித்து வழிநடத்தும் தாயே, எல்லாவற்றிற்கும் மேலாக இறை இயேசுவையே அன்பு செய்யவும் அவருக்காகவே வாழுவும் எங்களுக்கு துணை செய்வீராக. ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும் அன்புடன் அரவணைக்கும் அன்னையே, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கின்ற நீர் சக்தி மிக்கவளாய் இருக்கின்றீர் அம்மா, நாங்கள் கேட்பதை தட்டாமல் தருகின்ற அன்புத் தாயே, துன்ப துயரங்களிலிருந்து எங்களை காப்பாற்றும், தீராத வியாதி வருத்தங்களிலிருந்து விடுவித்தருளும். வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும். அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும், வாழ்வதற்கு அறியாது வருந்தும் எங்களுக்கு வாழ வழிகாட்டும், எங்கள் குடும்பங்களையும், தொழிலையும் ஆசீர்வதித்து பாதுகாத்தருளும் தாயே! ஆமென். புனித ஆரோக்கிய அன்னையே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..

அற்புத ஆரோக்கிய மழை மலைத் தாயை நோக்கி ஜெபம்|Arputha Arokiya Mazhai Malai Mathaavai Nokki Jebam

 அற்புத ஆரோக்கிய மழை மலைத் தாயே / அச்சிறுப்பாக்கம் நல்லாயன் குன்றில் வீற்றிருக்கும் அம்மா / உமது குழந்தைகள் நாங்கள் / உம்மைவணங்குகின்றோம் / கடவுளின் அன்னையே தாயே / உம்மையே நாங்கள் பின்பற்றி / நம்பிக்கையோடு உம்மைப் பற்றிக்கொண்டு / வாழ்வில் இறையருள் பெற்றிட /நிறையாசீர் தாரும் அம்மா / பாசத்தோடு எம்மைப் பாதுகாக்கும் அன்னையே / பரம தந்தையிடம் எமக்காய்ப் / பரிந்து பேசும் அம்மா / தீராத நோய்களையெல்லாம் தீர்ப்பவர் நீரே /நம்பிக்கையோடு வருவோர்க்கு ஆறுதல் நீரே / நன்றியால் உம் பாதம் பணிகின்றோம் / அம்மா ஆரோக்கியத் தாயே /ஆரோக்கியத்தை மழையாய்ப் பொழிபவரே / நற்சுகத்தையும் /மன அமைதியையும்/நிறைவாய்த் தாரும் அம்மா/ஞானத்திலும், அறிவிலும் வளர்ந்திட / வேலைவாய்ப்பும் வாழ்க்கைத் தரமும் பெற்றிட/உம் திருமகன் இயேசுவிடம் / மன்றாடும் தாயே / எங்கள் உழைப்பையும் / தொழிலையும் / ஆசீர்வதியும் தாயே /எங்களுக்குப் போதிய மழையைத் தந்து / விளைச்சலைப் பெருக்கும் அம்மா / சுபநிகழ்ச்சிகளும் / குழந்தைப் பாக்கியம் கிடைத்திடவும் / தயை புரியும் தாயே / அன்பின் நிறைவே அன்னையே/சமுதாயத்தில் நீதி, நேர்மை நிலைத்திடவும்/எம்மில் மனித நேயம் ...

மின்னல் மாதாவை நோக்கி ஜெபம்

 எங்கள் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக தரையிறங்கிய மின்னல் மாதாவே! ஒளிவெள்ளத்தில் மண்ணுக்கு வந்த தங்கத் தாரகையே! மனச்சோர்வினால் வாடும் நெஞ்சங்களுக்கும், ஆதரவற்றோர்க்கும் அடைக்கல பாறையே! துன்ப துயரங்களிலிருந்து விடுதலை அளிப்பவளே! வறுமையில் வாடும் ஏழைகளின் வாழ்வை வளமாக்கும், தீராத நோயினால் அல்லல்படும் நோயாளிகளை நலமாக்கும் உம்மையே தஞ்சமென்று நாடிவரும் அடியோர்களின் வாழ்வை வளமாக்கும் எங்கள் அனைவருக்காகவும் உம் திருமகன் இயேசுவிடம் பரிந்து பேசி பாதுகாப்பு அளித்தருளும் தாயே! உம்மை வாழ்த்தி வணங்குகிறோம். எம் உயிர் உள்ளவரை ஆமென்!

அருட்கரம் தேடி உன் ஆலய பீடம்- வருகை பாடல்

  🎵 அருட்கரம் தேடி 🎵 அருட்கரம் தேடி உன் ஆலய பீடம் அலை அலையாக வருகின்றோம் அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய ஆனந்தமாக வருகின்றோம். ஆயிரம் ஆயிரம் ஆசைகளால் ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை மூழ்கிடும் வேளையில் எம் இறைவா உன் கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும். பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளி இருக்க நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன் கரம். ஆறுதல் வேண்டும் எம் இதயங்களோ அன்பினைத் தேடி அலைகின்றதே தேற்றிட விரையும் எம் தலைவா உன் தெய்வீகக் கரம் தானே எமைத் தேற்றும். கொடும் பிணியோ வரும் பிரிவோ துயர் தருமோ துணை இருக்க நாளுமே அன்பால் ஆறுதல் வழங்கும். --- 🎵 Thanglish Lyrics 🎵 Arutkaram Thedi Un Aalaya Peedam Alai Alaiyaaga Varugindrom Aruviyaai Vazhiyum Un Arulinil Nanaiya Aanandhamaaga Varugindrom. Aayiram Aayiram Aasaigalaal Aadidum Oodamaai Em Vaazhkai Moozhgidum Velaiyil Em Iraivaa Un Karam Thaane Emmai Karai Serkkum. Perum Puyalo Ezhum Alaiyo Nidham Varumo Oli Irukka Naalume Emmaik Kaathidum Undhan Karam. Aarudhal Vendum Em Idhayangalo Anbinai Thedi Alaigindradhe Thetrida Viraiyum Em Tha...

🙏 காலை ஜெபம் 🙏|morning Jebam

அன்புத் தந்தையே இறைவா! இந்தக் காலை வேளையில் உம்மை நான் போற்றிப் புகழ்கிறேன். உம் திருப்பெயரை வாழ்த்தி வணங்குகிறேன். கடந்த இரவில் நீர் என்னைப் பரிவுடன் காத்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். இந்தப் புதிய நாளில் எனது சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் அனைவரின் நல்வாழ்விற்காகவும், உமது மகிமைக்காகவும் பயன்படுத்த அருள்புரியும். நான் இறையன்பிற்கும் பிறரன்பிற்கும் விரோதமான எச்செயலையும் செய்யாதிருக்க வரமருளும். இந்த நாள் முழுவதும் அனைத்துத் தீமைகளிலிருந்தும் என்னைப் பாதுகாத்து, உமது அன்பிலும் அருளிலும் மலரச் செய்வீராக. உமது இறையாட்சி இம்மண்ணில் மலர்ந்திட, நான் உமது அன்பின் சாட்சியாய் வாழ்ந்திட வரமருளும். அன்னை மரியே, அன்புத் தாயே, வானகத் தூதர்களே, புனிதர்களே, உங்களைப்போல நானும் இறைவனின் திருவுளத்திற்கு ஏற்ப வாழ இறைவனின் அருட்கொடைகளப் பெற்று தகுதியாய்க் உங்களை வேண்டுகிறேன்.  -ஆமென் 🙏✨

நம்பிக்கை அறிக்கை| Nambikkai Arikkai

  விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய / இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியாரால் கருவுற்று / தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு / சிலுவையில் அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி / மூன்றாம் நாள் / இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகம் சென்று / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் / தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார். தூய ஆவியாரை நம்புகிறேன். தூய கத்தோலிக்கத் திருச்சபையையும் / புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன். பாவ மன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். நிலை வாழ்வை நம்புகிறேன்.  -ஆமென்.