Skip to main content

Posts

Showing posts from July, 2026

அற்புத குழந்தை இயேசு செபம்

 அற்புத குழந்தை இயேசு செபம் அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்களது உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைக் திருப்பியருளுமாறு தாழ்ந்து பணிந்து வணங்கி வேண்டுகிறோம், இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏந்து உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளுமாறு உம்மை இறைஞ்சுகிறோம்.  (வேண்டிய வரத்தை இங்கு குறிப்பிடுக) எங்களை வாட்டி வதைக்கும் துன்பத் துயரங்களையும், வேதனை சோதனைகளையும் நீக்கி உமது குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாடை ஏற்றருளும், அதனால் உமது ஆறுதலையும், ஆதரவையும் தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்தி போற்றுவோமாக.--- ஆமென்

புனித பிரான்சிஸ் சவேரியார் ஜெபம் | St. Francis Xavier Tamil Prayer | சக்திவாய்ந்த தமிழ் ஜெபம்

இறைவா அமைதியின் தூதுவனாய் என்னை பயன்படுத்தும், பகையுள்ள இடத்தில் பாசத்தையும், மனவேதனையுள்ள இடத்தில் மன்னிப்பையும்,ஐயமுள்ள சூழலில் விசுவாசத்தையும், அவநம்பிக்கையுள்ள இடத்தில் நம்பிக்கையையும், இருள் சூழ்ந்த இடத்தில் ஒளியையும், துயரம் நிறைந்த உள்ளத்தில் மகிழ்ச்சியையும் வழங்கிட எனக்கு அருள்புரியும். ஓ! தெய்வீக குருவே ஆறுதல் பெறுவதைவிட ஆறுதல் அளிக்கவும், பிறர் என்னை புரிந்து கொள்ள விரும்புவதைவிட பிறரை புரிந்து கொள்ளவும், பிறருடைய அன்பை அடைய ஆசிபதைவிட பிறருக்கு அன்பை அளிக்கவும் அருள்வீராக! ஏனெனில் கொடுக்கும் பொழுது மிகுதியாக பெறுகிறோம், மன்னிக்கும் பொழுது மன்னிப்பை அடைகிறோம், இறக்கும் பொழுது முடிவில்லா வாழ்விற்குள் பிறக்கிறோம், எனவே சுயநலமற்ற வாழ்வில் அமைதியை அடைகிறோம். --ஆமென். St. Francis Xavier Tamil Prayer St Francis Xavier Prayer Tamil புனித பிரான்சிஸ் சவேரியார் ஜெபம் சவேரியார் ஜெபம் Tamil Catholic Prayer Catholic Prayer Tamil Saint Francis Xavier Prayer Tamil Christian Prayer Christian Prayer Tamil Daily Prayer Tamil Tamil Jebam Catholic Saints Prayer Tamil புனிதர் ஜெபம் தமிழ் கத்தோலிக்...

இந்த நாளிலும் நம்முடைய குடும்ப பாதுகாப்பிற்காக ஒரு நிமிடம் ஜெபிப்போமா?

எங்களை அதிகமாய் நேசிக்கிற பரம தகப்பனே, இப்பொழுது யாரெல்லாம் இணைந்து ஜெபிக்கிறார்களோ, அவர்களுடைய சகல குடும்பங்களையும் இயேசு கிறிஸ்து ராஜாவுடைய பாதத்தில் அர்ப்பணிக்கிறோம். ராஜா, இப்பொழுது யாரெல்லாம் இணைந்து ஜெபிக்கிறார்களோ, அவர்களுடைய ஒவ்வொரு குடும்பத்தையும் அபரிமிதமாக சகல காரியங்களிலும் ஆசீர்வதிக்க வேண்டும். தங்களைத் தாழ்த்தி உம்முடைய சந்நிதியில் அர்ப்பணித்து ஜெபிக்கிற ஒவ்வொரு குடும்பத்தையும் பேர் பேராக நினைத்து ஆசீர்வதியுங்கள், ராஜா. எந்த குடும்பத்தில் எந்தச் சூழ்நிலையினால் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்களோ, அந்த எல்லா கட்டுகளும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலும், இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தினாலும் இப்பொழுதே உடைந்து போகட்டும். எல்லா தடைகளும் விலகிப்போகட்டும். ஒவ்வொரு குடும்பத்தையும் ஆசீர்வதியுங்கள், ராஜா. இந்த நாளை எங்களுக்கு ஆசீர்வாதமான நாளாக மாற்றித் தாரும். கிறிஸ்துவுக்குள் இருக்கிற ஆவிக்குரிய சகலவிதமான ஆசீர்வாதங்களையும் உம்முடைய பிள்ளைகள் பெற்றுக்கொள்ள கிருபை செய்யும். எந்த குடும்பத்தில் பலவீனத்தோடு ஜெபிக்கிறார்களோ, அவர்களுடைய எல்லா பலவீனங்களும் இப்பொழுதே இயேசு கிறிஸ்து...

இயேசுவை எதிர்நோக்கிய அன்னையிடம் செபம்

  இரக்கம் சொறியும் தூய தோமையார் இரத்த மலையில் கோவில் கொண்டுள்ள எம் அன்னையே இயேசுவை எதிர்நோக்கிக் காத்திருந்த திருத்தாயே, உம்மை வாழ்த்திப்போற்றி வணங்குகின்றோம். திருமலைப்படியேறி உம் திருப்பீடம் வருவோரை அருள்மழை மடியமர்த்தி உம் மகன் சீடர் ஆக்கும் அம்மா! திருவுளம் தாங்கும் கருவுளமே! அலகையின் சூழ்ச்சியால் அல்லல்படுவோரை உம்திரு கர்ப்பப்பேழைக்குள் ஒது காத்தருளும்! உம் திருவுருவம் தாங்கிய புனித தோமவின் உத்திரியத்தை அணிந்துகொண்டு இத்திருமலையை நோக்கி திருப்பயணம் வருவோரை அருள்வரங்களால் நிரப்பும். உம்திருவயிற்று ஆலயத்தில் மீட்பர் இயேசுவை உலகின் தெய்வமாய் உருவாக்கியது போல எம்மையும் உம் தெய்வீகக் கருவறையில் தாங்கி உம் மகன் விரும்பும் நல்லவர்களாய் உருவாக்கும்! எங்கள் அனைவரின் குடும்பங்களிலும் நற்குணங்கள் வளர, குடும்ப அமைதி நிலைக்க, தம்பதியரிடையே பிரமாணிக்கம் வலுப்பெற, தேவ அழைத்தல் உருவாக, ஞானம், அறிவு, கல்வி மேம்பாடு கிடைக்க, வேலை வாய்ப்புப் பெருக, தொழில் வளர்ச்சி பெற, பொருளாதாரம் சிறக்க, மழைபொழிய, விவசாயம் செழிக்க, நிலம், வீடு அமைய, நல்லவரன், மங்கள நிகழ்வுகள், குழந்தைப்பேறு, சுகப்பிரசவம், விபத்...

Daily tamil prayer

  வேதத்திலே நாம் வாசிக்கிறோம் யோவான் 10ஆம் அதிகாரம் 27ஆம் வசனத்திலே என் ஆடுகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் எனக்கு பின் செல்கிறது என்று கர்த்தர் சொல்கிறார். ஆம் பிரியமானவர்களே நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆடுகள் நாம் அவருடைய சத்தத்துக்கு செவி கொடுக்கும்போது ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையிலே ஆசீர்வாதங்கள் நம்முடைய வாழ்க்கையில் இன்றைக்கு யாருடைய சத்தத்துக்கு செவி கொடுக்கிறோம் இயேசு கிறிஸ்துவின் சத்தத்துக்கு செவி கொடுக்கிறோமா அல்லது அந்நிய சத்தத்துக்கு செவி கொடுக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்ப்போம் அல்லேலூயா நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் போது நமக்கு அவர் நித்திய ஜீவனை வைத்திருக்கிறார் ஆம் பிரியமானவர்களே ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவின் சத்தத்திற்கு செவி கொடுப்போம் நித்திய ஜீவனை நாம் சுதந்தரித்து கொள்வோம் அல்லேலூயா இந்த புதிய நாளுக்காக தேவ சமூகத்திலே தாழ்த்தி ஜெபிப்போம் ஜெபம் எங்களை அதிகமாய் நேசிக்கிற எங்கள் அன்பின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் அப்பா இந்த புதிய நாளை காண செய்த கிருபைக்காக நன்றி அப...

புனித தோமையார் மன்றாட்டு மாலை | st.thomas prayer

ஆண்டவரே இரக்கமாயிரும் - 2 கிறிஸ்துவே இரக்கமாயிரும் - 2 ஆண்டவரே இரக்கமாயிரும் - 2 கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் - 2 கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும் -2 விண்ணகத்திலிருக்கும் தந்தையே இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகத்தை மீட்ட சுதனே இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும் தூய ஆவியாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும் தூய தோமாவே (எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்) 1. ஆண்டவர் இயேசுவின் பன்னிரு சீடருள் ஒருவரான தூய தோமாவே 2. நற்செய்தி போதிக்கும் பேறுகொண்ட தூய தோமாவே 3. ஆண்டவர் இயேசுவை ஆவலாகவே தொடர்ந்த நல் தூய தோமாவே 4. கிறிஸ்துவுக்காக குருதி சிந்தி வேதசாட்சியான தூய தோமாவே 5. என் ஆண்டவரே என் கடவுளே என்று மொழிந்த நல் தூய தோமாவே 6. இயேசுவின் காயங்கள் தொடுகின்ற பெரும் பேறுகொண்ட தூய தோமாவே 7. கிறிஸ்துவின் உண்மை விசுவாச வாழ்வின் மாதிரியான தூய தோமாவே 8. நற்செய்தி போதிக்கும் ஆர்வம் கொண்டிட அழைத்த நல் தூய தோமாவே 9. விசுவாசப் பொருளை இயேசுவிடம் நிறைவாக அறிந்த தூய தோமாவே 10. இறைவனில் பேரன்பு கொள்வதே பெரும் செல்வம் என்ற தூய தோமாவே 11. இந்திய நாட்டின் ஒளியாக தினமும் திகழும் நல் தூய தோமாவ...

புனித தோமையாரிடம் செபம்| St.Thomas prayer tamil

இந்தியாவின் திருத்தூதரே, புனித தோமையாரே. என் ஆண்டவரே! என் கடவுளே! என்று விசுவாசத்தை அறிக்கையிட்டவரே, எம் இந்திய நாட்டு மக்களுக்கு அன்புடன் நற்செய்தி அறிவித்து, இத்திருமலையில் கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்திய உம்மை வணங்குகிறோம். நீர் அறிவித்த இயேசு ஆண்டவரை நாங்களும் அறிவிக்கவும், நீர் அறிமுகம் செய்த அன்னை மரியாளை ஆர்வமுடன் நாடி வரவும், கிறிஸ்துவின் மீது நாங்கள் ஆழ்ந்த பற்றுக்கொள்ளவும், அவரை ஆவலோடு பின்பற்றி, அவரது சாட்சிகளாக வாழவும் சக்தியை பெற்றுத்தாரும். எம் வாழ்விலே வரும் துன்ப துயரங்களை தைரியத்தோடு எதிர்கொள்ள, எம் துன்ப நேரங்களில் எம்முடன் இருந்து எமக்காக பரிந்து பேசியருளும். உமது வல்லமைமிக்க பரிந்துரையால் என்னையும் என் குடும்பத்தையும் நன்மைகளால் நிரப்பும். இங்கு கூடி இருப்போர் அனைவரின் தேவைகளும் நிறைவேற மன்றாடும். எங்கள் பாதுகாவலரான புனித தோமையாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் tamil RC songs

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம்  அவர் பலியினில் கலந்திட  அவர் ஒளியினில் நடந்திட  சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்  தோள்களில் நம்மை தாங்குவார்  துயரினில் அவர் தேற்றுவார்  சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார்  ஆவியால் நம்மை நிரப்புவார்  அமைதியை என்றும் அருளுவார்  ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்  விடியலின் கீதமாக முழங்குவார்  விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்  வாருங்கள்..........

ஆவியிலும் என்றும் உண்மையிலும் RC Song

ஆவியிலும் என்றும் உண்மையிலும் வழிபட வாருங்கள் - இந்த  அவனியில் இறைவன் அரசினைக்காணும்  ஆனந்தம் பாருங்கள் உலகின் மாந்தர்களே உங்கள்  இதயத்தைத் திறந்திடுங்கள்  இறைவார்த்தையின் பொருள் காணுங்கள்  இகம் வாழ்ந்திடும் முறை காணுங்கள் உலகின் மாந்தர்களே உங்கள்  கரங்களைத் திறந்திடுங்கள்  வறியோருக்கு வழி காட்டுங்கள்  வளம் பொங்கிட வகை கூறுங்கள்