அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார் விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் வாருங்கள்..........
கோடி அற்புதரான புனித அந்தோனியாரே வேண்டும் வரத்தை தட்டாமல் தருகின்ற புனிதரே எங்களின் துன்ப துயரங்களில் ஆதரவு கரம் தருபவரே உம்மையே நம்பி வந்தோம் உம் தயையை கேட்டு வந்தோம் இறைவாக்கு உரைக்கும் வல்லமை பெற்றவரே நாங்கள் இறைவார்த்தையின்படி வாழச செய்தருளும் காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்து தருபவரே நாங்கள் தொலைத்துவிட்டு அவதிப்படுகின்ற பொருட்களை கண்டெடுத்து தாரும் சாத்தானின் சோதனைகளில் விழுந்து தவிக்கிறோம் எங்களை கரம் பிடித்து தூக்கி எழுப்பிவிடும் அழியா நாவுடைய புனிதரே இறைமகன் இயேசுவிடம் எங்களுக்காய் பரிந்து பேசி எங்கள் வாழ்வையும் ஆன்மாவையும் நாங்கள் அழியாமல் என்றென்றும் காத்துக்கொள்ள உம் அருள் உதவியை வேண்டி ஜெபிக்கின்றோம் அருள் புரியும் பரிந்து பேசும் -ஆமென்

Comments
Post a Comment