Skip to main content

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் tamil RC songs

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம்  அவர் பலியினில் கலந்திட  அவர் ஒளியினில் நடந்திட  சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்  தோள்களில் நம்மை தாங்குவார்  துயரினில் அவர் தேற்றுவார்  சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார்  ஆவியால் நம்மை நிரப்புவார்  அமைதியை என்றும் அருளுவார்  ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்  விடியலின் கீதமாக முழங்குவார்  விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்  வாருங்கள்..........

அற்புத ஆரோக்கிய மழை மலைத் தாயை நோக்கி ஜெபம்|Arputha Arokiya Mazhai Malai Mathaavai Nokki Jebam


 அற்புத ஆரோக்கிய மழை மலைத் தாயே / அச்சிறுப்பாக்கம் நல்லாயன் குன்றில் வீற்றிருக்கும் அம்மா / உமது குழந்தைகள் நாங்கள் / உம்மைவணங்குகின்றோம் / கடவுளின் அன்னையே தாயே / உம்மையே நாங்கள் பின்பற்றி / நம்பிக்கையோடு உம்மைப் பற்றிக்கொண்டு / வாழ்வில் இறையருள் பெற்றிட /நிறையாசீர் தாரும் அம்மா / பாசத்தோடு எம்மைப் பாதுகாக்கும் அன்னையே / பரம தந்தையிடம் எமக்காய்ப் / பரிந்து பேசும் அம்மா / தீராத நோய்களையெல்லாம் தீர்ப்பவர் நீரே /நம்பிக்கையோடு வருவோர்க்கு ஆறுதல் நீரே / நன்றியால் உம் பாதம் பணிகின்றோம் / அம்மா ஆரோக்கியத் தாயே /ஆரோக்கியத்தை மழையாய்ப் பொழிபவரே / நற்சுகத்தையும் /மன அமைதியையும்/நிறைவாய்த் தாரும் அம்மா/ஞானத்திலும், அறிவிலும் வளர்ந்திட / வேலைவாய்ப்பும் வாழ்க்கைத் தரமும் பெற்றிட/உம் திருமகன் இயேசுவிடம் / மன்றாடும் தாயே / எங்கள் உழைப்பையும் / தொழிலையும் / ஆசீர்வதியும் தாயே /எங்களுக்குப் போதிய மழையைத் தந்து / விளைச்சலைப் பெருக்கும் அம்மா / சுபநிகழ்ச்சிகளும் / குழந்தைப் பாக்கியம் கிடைத்திடவும் / தயை புரியும் தாயே / அன்பின் நிறைவே அன்னையே/சமுதாயத்தில் நீதி, நேர்மை நிலைத்திடவும்/எம்மில் மனித நேயம் வளர்ந்திடவும் அருள்தாரும் / உம் வழியாய்ப் பெற்றுக்கொள்ளும் / நன்மைகளுக்கு ஈடாக / எம் அயலாரின் துன்பத்தில் துணை நிற்க / நல்ல மனதைத் தாரும் /உம் திருமகன் இயேசுவைப் போல் / கடவுளுக்கும் மனிதருக்கும் /உகந்தவர்களாய் வாழ வரமருளும்.

-ஆமென்.


ஆரோக்கிய மழை மலை மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Arputha Arokiya Mazhai Malai Thaaye! Achiruppaakkam Nallaayan Kundril Veetrirukkum Ammaa! Umadhu Kuzhandhaigal Naangal, Ummai Vanangugindrom. Kadavulin Annaiye Thaaye! Ummaiye Naangal Pinpatri, Nambikkaiyodu Ummaip Patrikkondu, Vaazhvil Iraiyarul Petrida Niraiya Aaseer Thaarum Ammaa.

Paasaththodu Emmaip Paadhugaakkum Annaiye! Parama Thandhaiyidam Emakkaaip Parindhu Pesum Ammaa! Theeraadha Noigalaiyellaam Theerppavar Neere! Nambikkaiyodu Varuvorkku Aarudhal Neere! Nandriyaal Um Paadham Panigindrom Ammaa Arokiyath Thaaye!

Arokiyaththai Mazhaiyaai Pozhipavare! Narsugaththaiyum Mana Amaidhiyaiyum Niraivaai Thaarum Ammaa. Gnaanaththilum Arivilum Valarnthida, Velaivaaippum Vaazhkkai Tharamum Petrida, Um Thirumagan Yesuvidam Mandraadum Thaaye!

Engal Uzhaippaiyum Thozhilaiyum Aaseervadhiyum Thaaye! Engalukku Podhiya Mazhaiyai Thandhu Vilaichchalai Perukkum Ammaa! Suba Nigazhchchigalum Kuzhandhai Paakkiyam Kidaithidavum Thayai Puriyum Thaaye!

Anbin Niraive Annaiye! Samudhaayaththil Neethi, Nermai Nilaiththidavum, Emmil Manidha Neyam Valarnthidavum Arul Thaarum. Um Vazhiyaai Petrukkollum Nanmaigalukku Eedaaga Em Ayalaarin Thunbaththil Thunai Nirka Nalla Manadhai Thaarum.

Um Thirumagan Yesuvaip Pol Kadavulukkum Manidharukkum Ugandhavargalaai Vaazha Varam Arulum. 

-Aamen.


🙏 Arokiya Mazhai Malai Mathaave! Engalukkaaga Vendikkollum.

 ✝️🕊️🌹🙏

Comments

Popular posts from this blog

தூய குழந்தை இயேசுவின் தெரசாவை நோக்கி ஜெபம்

 மகிழ்வும் இனிமையும் கமழும் பிறரன்பு என்னும்  ஆன்மீக விருந்தை தம்மோடு வாழ்ந்தவர்க்கு வழங்கிய சிறுமலரே,  பிறர் துன்பம் விளைவித்த நேரத்திலும் அவர்களை  அன்போடு ஏற்றுக் கொண்ட நறுமலரே ,  உம்வழி நாங்கள் நடக்கவும், அன்புப் பணிகளில் நிலைத்து வாழவும்  எமக்கு அருள் புரிவீராக  குழந்தை இயேசுவை அதிகமாக நேசித்த சின்ன ராணியே,  மாசற்ற குழந்தை உள்ளங்களாய் நாங்கள் வளர அருள் தாரும் - ஆமென்

புனித அந்தோணியார் நவநாள் ஜெபம் (Tamil & English)

  அன்பும் அருளும் நிறைந்த புனித அந்தோணியாரே , இறைவனிடத்தில் மிகுந்த அருள் பெற்றவரே, எங்கள் தேவைகளிலும் துன்பங்களிலும் எங்களுக்கு துணையாக இருங்கள். தவறிப்போனவற்றை கண்டுபிடிக்க உதவும் அருளாளரே, எங்கள் வாழ்க்கையில் தொலைந்துபோன சமாதானம், நம்பிக்கை, சந்தோஷம் ஆகியவற்றையும் மீட்டருள வேண்டுகிறோம். எங்கள் குடும்பங்களை ஆசீர்வதித்து, நோயாளிகளுக்கு ஆரோக்கியமும், துயரப்படுவோருக்கு ஆறுதலும், வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்புகளும் அருளுங்கள். நாங்கள் கேட்கும் வேண்டுதல்களை இறைவனிடத்தில் எடுத்துரைத்து, அவருடைய சித்தத்தின்படி எங்களுக்கு அருள் கிடைக்கச் செய்யும். புனித அந்தோணியாரே, எங்களுக்காக ஜெபியுங்கள். ஆமென். Anbum arulum niraintha Punitha Anthoniyare, Iraivanidathil miguntha arul petravare, Engal thevaigalilum thunbangalilum Engalukku thunaiyaga irungal. Thavaripponavatrai kandupidikka uthavum Arulalare, Engal vaalkaiyil tholaindhupona Samathanam, nambikkai, santhosham agiyavatraiyum Meettarula vendugiroam. Engal kudumbangalai aasirvathithu, Noiyaligalkku aarokkiyamum, Thuyarappaduvoru...

இறை இரக்க மன்றாட்டு

  அன்பும், இரக்கமும் உள்ள இயேசுவே உம்மை அன்பு செய்வோர் வாழ்வை என்றும் தாங்குபவரே! அனைத்தையும் வாழ வைக்கும் அன்பின் திருஉருவே! பாவிகளின் நம்பிக்கையும், மீட்பும் ஆனவரே! மனு உரு எடுத்து எங்களில் ஒருவராக வாழ்ந்தவரே! இதோ, அசைக்க முடியாத முழு விசுவாசத்துடன் உமது திருத்தலத்தில் கூடியுள்ளோம். உமது இரக்கத்தின் ஊற்றிலிருந்து எங்களுக்கு அருள்தாரும். அனாதைகளையும், விதவைகளையும், வறியோரையும், பாவிகளையும், ஆதரவற்றோரையும், ஒடுக்கப்பட்டவர்களையும் உமது அன்புக் கரங்களால் வழி நடத்தும், உமது இரக்கப் பெருக்கத்தினால் எங்கள் அனைவரையும் காப்பாற்றும். அன்பின் திருஉருவே, ஒற்றுமையின் அடையாளமே, விண்ணக மருத்துவரே தீராத நோய், வறுமை, துன்ப துயரங்களினால் சோர்வுற்று ஒற்றுமை அமைதியில்லாமல் அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். ஓ. என் இனிய இயேசுவே பாவ மன்னிப்பு கோரி நான் விடும் கண்ணீரும் உம் மீது நான் கொண்டுள்ள அன்பும் என் அன்றாட உணவாய் இருப்பதாக. என் இதயம் உமது ஆலயமாக அமைவதாக. மரண வேளையில் என் ஆன்மாவை உமது நித்திய இளைப்பாற்றியில் ஏற்றுக்கொள்ளும்.                    ...