அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார் விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் வாருங்கள்..........
ஆவியிலும் என்றும் உண்மையிலும் வழிபட வாருங்கள் - இந்த அவனியில் இறைவன் அரசினைக்காணும் ஆனந்தம் பாருங்கள் உலகின் மாந்தர்களே உங்கள் இதயத்தைத் திறந்திடுங்கள் இறைவார்த்தையின் பொருள் காணுங்கள் இகம் வாழ்ந்திடும் முறை காணுங்கள் உலகின் மாந்தர்களே உங்கள் கரங்களைத் திறந்திடுங்கள் வறியோருக்கு வழி காட்டுங்கள் வளம் பொங்கிட வகை கூறுங்கள்