அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார் விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் வாருங்கள்..........
பொறுமையின் கண்ணாடியும் அமைதியின் தூதுவருமான புனித யோசேப்பே! திருக்குடும்பத்தின் தலைவராகவும் எங்கள் குடும்பத்தின் பாதுகாவலராகவும் இருந்து எங்களைக் காத்து என்றென்றும் வழிநடத்தி எங்களுக்காக இறைமகன் இயேசுவிடத்தில் பரிந்து பேசுபவரே, இம்மாதத்தில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதித்து வியாபாரம் பெருகச் செய்யும் உண்மையோடும் நேர்மையோடும் நாங்கள் உழைக்க எங்களை திட படுத்தி ஊக்கப்படுத்தும். சோதனை காலங்களில் சோர்ந்து விடாமல் கன்னி மரியாயையும் குழந்தை இயேசுவையும் நீர் பாதுகாத்தது போல எங்களையும் வழிநடத்தி உம் வழியில் நாங்களும் நீதியோடு நேர்மையோடு நடக்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். வானத்தூதர் போற்றும் நீதிமானே வாழ்வில் வரும் துன்பங்களை உம்மைப் போல சந்தித்து வெற்றி கொள்ளச் செய்தருளும்.
- ஆமென்

Comments
Post a Comment