Skip to main content

Posts

Showing posts from May, 2026

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் tamil RC songs

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம்  அவர் பலியினில் கலந்திட  அவர் ஒளியினில் நடந்திட  சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்  தோள்களில் நம்மை தாங்குவார்  துயரினில் அவர் தேற்றுவார்  சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார்  ஆவியால் நம்மை நிரப்புவார்  அமைதியை என்றும் அருளுவார்  ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்  விடியலின் கீதமாக முழங்குவார்  விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்  வாருங்கள்..........

உதவிக்கான ஜெபம் |help prayer

  படைகளின் ஆண்டவரே! வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவரே! உம் சிறகுகளால் என்னை அரவணைத்துக் காப்பாற்றும். உமது உண்மையே என் கவசமும் கேடயமுமாய் அமையச் செய்யும். இரவின் திகிலும், இருளின் கொள்ளை நோயும், பகலின் வாதையும், என்னை அணுகாமல் எல்லாம் வல்லவரே என்னைக் காப்பாற்றும். தீங்கு எனக்கு நேரிடாமலும், வாதை என் வீட்டை நெருங்காமலும் உம் தூதர்களை அனுப்பி என்னைப் பலப்படுத்தும். உமது மாட்சியும், உமது மகத்துவமும் எனக்கு அரணாக அமையச் செய்யும் என்று உம்மைப் பணிந்து வேண்டுகிறேன். நான் உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம் எனக்கு பதில் அளிக்க காலந்தாழ்த்தாதேயும். எம் பங்கு மக்கள் எல்லோரையும் ஆசீர்வதியும். அமைதியும் மனமகிழ்வும் நிறைந்த நீடிய ஆயுளால் அவர்களுக்கு நிறைவளித்தருள மன்றாடுகிறேன்.  -ஆமென்.

புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் ஜெபம்|Punitha Velankanni Arokkiya Annaikku Navanaal Jebam

  புனித மரியே, மாசில்லா கன்னிகையே! யேசுவின் தாயாக மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவளே! துன்ப படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் அன்னையே! உமது தெய்வீக திருமகனின் அளவற்ற வல்லமையை நம்பி, உமது வல்லமை நிறைந்த மன்றாட்டுகளில் உறுதி கொண்டு, இந்த நவநாளின் போது நான் கேட்கும் மன்றாட்டுக்கள் தெய்வ திருவுளத்திற்கு ஏற்றவையானால் உம் திருமகன் யேசுவிடம் பரிந்து பேசி என் மன்றாட்டுகளை எனக்கு நிறைவேற்றி தாரும். இறைவனின் மாட்சி பெற்ற அன்னையே "அருள் நிறைந்தவள்" என்று அன்று அதி தூதர் கபிரியேல் சொல்லும் போது அவர் கொண்டிருந்த அதே பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துக்களை கூறுகிறேன்; அன்புடன் ஏற்றுகொள்ளும். அருள் நிறை மரியே வாழ்க... வருந்துவோருக்கு ஆறுதலே! நான் இப்போது கேட்ட மன்றாட்டுக்கள் நிறைவேறுமாறு எனது நற்செயல்களையும் நான் ஏற்கும் துன்பங்களையும் ஒறுத்தல் முயற்சிகளையும் உமக்கு ஒப்பு கொடுக்கிறேன். உமது திருமகனிடம் உம் அடியான் எனக்காக பரிந்து பேசி என் மன்றாட்டுகளை அடைந்து தந்தருளும் வேளாங்கண்ணி மாதாவே. ஆமென் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்! - ஆமென் 

புனித சூசையப்பர் ஜெபம் | St.Joseph tamil prayer

  புனித சூசையப்பரே! உமது அடைக்கலம் மிகவும் மகத்தானது; வல்லமை மிக்கது; இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. எனவே, எனது ஆசைகளையும் எண்ணங்களையும் உமது அடைக்கலத்தில் வைக்கிறேன். உமது வல்லமை மிகுந்ந பரிந்துரையால் உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக, மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும் ஆராதனையும் செலுத்தக் கடவேன். புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக் கரங்களில் உறங்கும் இயேசுவையும் எக்காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம் மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவரை என் பொருட்டு, உம் மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படிக் கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலரே! எங்களுக்காக மன்றாடும்.     -ஆமென் .

இறை இரக்க மன்றாட்டு

  அன்பும், இரக்கமும் உள்ள இயேசுவே உம்மை அன்பு செய்வோர் வாழ்வை என்றும் தாங்குபவரே! அனைத்தையும் வாழ வைக்கும் அன்பின் திருஉருவே! பாவிகளின் நம்பிக்கையும், மீட்பும் ஆனவரே! மனு உரு எடுத்து எங்களில் ஒருவராக வாழ்ந்தவரே! இதோ, அசைக்க முடியாத முழு விசுவாசத்துடன் உமது திருத்தலத்தில் கூடியுள்ளோம். உமது இரக்கத்தின் ஊற்றிலிருந்து எங்களுக்கு அருள்தாரும். அனாதைகளையும், விதவைகளையும், வறியோரையும், பாவிகளையும், ஆதரவற்றோரையும், ஒடுக்கப்பட்டவர்களையும் உமது அன்புக் கரங்களால் வழி நடத்தும், உமது இரக்கப் பெருக்கத்தினால் எங்கள் அனைவரையும் காப்பாற்றும். அன்பின் திருஉருவே, ஒற்றுமையின் அடையாளமே, விண்ணக மருத்துவரே தீராத நோய், வறுமை, துன்ப துயரங்களினால் சோர்வுற்று ஒற்றுமை அமைதியில்லாமல் அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். ஓ. என் இனிய இயேசுவே பாவ மன்னிப்பு கோரி நான் விடும் கண்ணீரும் உம் மீது நான் கொண்டுள்ள அன்பும் என் அன்றாட உணவாய் இருப்பதாக. என் இதயம் உமது ஆலயமாக அமைவதாக. மரண வேளையில் என் ஆன்மாவை உமது நித்திய இளைப்பாற்றியில் ஏற்றுக்கொள்ளும்.                    ...

புனித மிக்கேல் அதிதூதரை நோக்கி ஜெபம்

  தூய மிக்கேல் அதிதூதரே, வானுலக சேனைத் தளங்களின் அதிபதியே / சதா ஜீவ அரூபிகளில் மகிமைப் பிரதாபம் நிறைந்த சம்மனசானவரே / அவர்களிலும் உத்தமமானவரே / உன்னத கடவுளின் மந்திராலோசனை நிர்ணயப் பெட்டகமே / தேவ கட்டளைப்படியே பரலோக வாசலைத் திறக்கவும் பூட்டவும் அதிகாரம் உள்ள வானவரே / தேவநீதி சிம்மாசனத்தண்டையில் எங்கள் ஆத்துமாக்களைச் சேர்ப்பிக்கும் தூதாதி தூதரே / மரண அவஸ்தப்பைடுகிறவர்களுக்கு உதவி செய்ய தீவிரித்தோடிவரும் உபகாரியே / மரித்தவர்களின் ஆத்துமங்களை அழைத்துக் கொண்டு போய் திவ்ய கர்த்தரின் சந்நிதியில் சேர்ப்பிக்கும் காவலரே / பலவீனனும் நிர்ப்பாக்கி யனுமாகிய அடியேனைக் கிருபாகடாட்சமாய் பார்த்து என் ஜீவிய காலம் முற்றிலும் விஷேசமாய் மரண தருவாயிலும் எனக்கு உமது தயை நேச உதவி புரிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன்.  -ஆமென்.

தூய குழந்தை இயேசுவின் தெரசாவை நோக்கி ஜெபம்

 மகிழ்வும் இனிமையும் கமழும் பிறரன்பு என்னும்  ஆன்மீக விருந்தை தம்மோடு வாழ்ந்தவர்க்கு வழங்கிய சிறுமலரே,  பிறர் துன்பம் விளைவித்த நேரத்திலும் அவர்களை  அன்போடு ஏற்றுக் கொண்ட நறுமலரே ,  உம்வழி நாங்கள் நடக்கவும், அன்புப் பணிகளில் நிலைத்து வாழவும்  எமக்கு அருள் புரிவீராக  குழந்தை இயேசுவை அதிகமாக நேசித்த சின்ன ராணியே,  மாசற்ற குழந்தை உள்ளங்களாய் நாங்கள் வளர அருள் தாரும் - ஆமென்

புனித அந்தோணியார் நவநாள் ஜெபம் (Tamil & English)

  அன்பும் அருளும் நிறைந்த புனித அந்தோணியாரே , இறைவனிடத்தில் மிகுந்த அருள் பெற்றவரே, எங்கள் தேவைகளிலும் துன்பங்களிலும் எங்களுக்கு துணையாக இருங்கள். தவறிப்போனவற்றை கண்டுபிடிக்க உதவும் அருளாளரே, எங்கள் வாழ்க்கையில் தொலைந்துபோன சமாதானம், நம்பிக்கை, சந்தோஷம் ஆகியவற்றையும் மீட்டருள வேண்டுகிறோம். எங்கள் குடும்பங்களை ஆசீர்வதித்து, நோயாளிகளுக்கு ஆரோக்கியமும், துயரப்படுவோருக்கு ஆறுதலும், வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்புகளும் அருளுங்கள். நாங்கள் கேட்கும் வேண்டுதல்களை இறைவனிடத்தில் எடுத்துரைத்து, அவருடைய சித்தத்தின்படி எங்களுக்கு அருள் கிடைக்கச் செய்யும். புனித அந்தோணியாரே, எங்களுக்காக ஜெபியுங்கள். ஆமென். Anbum arulum niraintha Punitha Anthoniyare, Iraivanidathil miguntha arul petravare, Engal thevaigalilum thunbangalilum Engalukku thunaiyaga irungal. Thavaripponavatrai kandupidikka uthavum Arulalare, Engal vaalkaiyil tholaindhupona Samathanam, nambikkai, santhosham agiyavatraiyum Meettarula vendugiroam. Engal kudumbangalai aasirvathithu, Noiyaligalkku aarokkiyamum, Thuyarappaduvoru...