அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார் விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் வாருங்கள்..........
இடைவிடா சகாயமாதா
இணையில்லாத தேவ மாதா
பாவவினை தீர்ப்பாய்
பதம் எமை சேர்ப்பாய்
நிதம் துணை சேர்ப்பாய்
(1)
ஆறாத மனப் புண்ணை ஆற்றிடுவாய்
அன்னை தீராத துயர் தன்னை தீர்த்திடுவாய் -2
மாறாத கொடுமை தீராத வறுமை
தானாக என்றுமே மாற்றிடுவாய் -2
(2)
கள்ள கபடின்றி கடுகளவு பயமின்றி
உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2
வெள்ளிபோல அவள் கருணை பாய்ந்திட
தேனூறும் வான் வாழ்வு தந்திடுவாய் -2
Comments
Post a Comment