அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார் விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் வாருங்கள்..........
ஞானத்தின் ஊற்றே இறைவா! எங்களின் இந்த இளம் வயதில் பல நன்மைகளை எங்களுக்கு பொழிந்து வழிநடத்தி வந்த நேரங்களை நன்றியோடு நினைக்கிறோம். எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வுகளை எழுதவிருக்கும் நாங்கள் இந்த இறுதி நாட்களில் எங்கள் பாடங்களை கடின முயற்சியுடன் படித்து தேர்வுகளை சிறப்பாக எழுதி முடிக்கவும் அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும் தேவையான ஞானத்தையும் நினைவாற்றலையும் தெளிந்த மனதையும் உடல் உள்ள வலிமைகளையும் எங்களுக்கு கொடுத்தருளுமாறு உம்மை தாழ்மையோடு வேண்டுகிறோம். ஞானத்தின் இருப்பிடமே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
-ஆமென்

Comments
Post a Comment