அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார் விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் வாருங்கள்..........
மகிழ்வும் இனிமையும் கமழும் பிறரன்பு என்னும் ஆன்மீக விருந்தை தம்மோடு வாழ்ந்தவர்க்கு வழங்கிய சிறுமலரே, பிறர் துன்பம் விளைவித்த நேரத்திலும் அவர்களை அன்போடு ஏற்றுக் கொண்ட நறுமலரே , உம்வழி நாங்கள் நடக்கவும், அன்புப் பணிகளில் நிலைத்து வாழவும் எமக்கு அருள் புரிவீராக குழந்தை இயேசுவை அதிகமாக நேசித்த சின்ன ராணியே, மாசற்ற குழந்தை உள்ளங்களாய் நாங்கள் வளர அருள் தாரும் - ஆமென்
Comments