அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார் விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் வாருங்கள்..........
இறையாட்சியின் மனிதர்களே
மரிமைந்தனின் சீடர்களே
இறை அழைக்கின்றார் அன்பில் இணைக்கின்றார்
புது உலகொன்றைப் படைத்திட வாருங்களே
நாம் வாழும் இந்த பூமி
நலமாகிட வேண்டாமா?
நலவற்றவர் வாழ்வினில் நீதி
நின்று நிலைத்திட வேண்டாமா?
இயேசுவே காட்டிய வழியுண்டு
இயங்கிட நமக்கொரு நெறியுண்டு
எதிர் நோக்குடன் வாருங்கள்
கதி விளைந்திடும் காணுங்கள்
இன்று மனித இதயங்களெல்லாம்
ஒன்று சேர்ந்திட வேண்டாமா?
இறையாட்சியின் மாற்றங்கள் எங்கும்
நிறைவேறிட வேண்டாமா?
மாநிலம் முழுவதும் ஒரு குடும்பம்
மாந்தர்கள் எல்லாம் உடன்பிறப்பே
இந்த உண்மையை வாழ்ந்திடுவோம்
எந்தப் பகையினும் வென்றிடுவோம்
Comments
Post a Comment