Skip to main content

Daily tamil prayer

  வேதத்திலே நாம் வாசிக்கிறோம் யோவான் 10ஆம் அதிகாரம் 27ஆம் வசனத்திலே என் ஆடுகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் எனக்கு பின் செல்கிறது என்று கர்த்தர் சொல்கிறார். ஆம் பிரியமானவர்களே நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆடுகள் நாம் அவருடைய சத்தத்துக்கு செவி கொடுக்கும்போது ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையிலே ஆசீர்வாதங்கள் நம்முடைய வாழ்க்கையில் இன்றைக்கு யாருடைய சத்தத்துக்கு செவி கொடுக்கிறோம் இயேசு கிறிஸ்துவின் சத்தத்துக்கு செவி கொடுக்கிறோமா அல்லது அந்நிய சத்தத்துக்கு செவி கொடுக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்ப்போம் அல்லேலூயா நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் போது நமக்கு அவர் நித்திய ஜீவனை வைத்திருக்கிறார் ஆம் பிரியமானவர்களே ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவின் சத்தத்திற்கு செவி கொடுப்போம் நித்திய ஜீவனை நாம் சுதந்தரித்து கொள்வோம் அல்லேலூயா இந்த புதிய நாளுக்காக தேவ சமூகத்திலே தாழ்த்தி ஜெபிப்போம் ஜெபம் எங்களை அதிகமாய் நேசிக்கிற எங்கள் அன்பின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் அப்பா இந்த புதிய நாளை காண செய்த கிருபைக்காக நன்றி அப...

இரவு நேர நன்றியின் ஜெபம் | அமைதியான உறக்கத்திற்கான ஜெபம்


நம்பிக்கையின் இறைவா!

 இந்த நாள் முழுவதும் என்னை பாதுகாத்து வழிநடத்தினீர். என் தேவைகளை அறிந்து உதவி புரிந்தீர் .உமக்கு நன்றி கூறுகின்றேன் .இந்த நாளில் என் உழைப்பை ஆசீர்வதித்தீர் நான் சந்தித்த மனிதர்கள் நான் செய்த பணிகளில் மனநிறைவை எனக்கு தந்தீர் உமக்கு நன்றி. இந்த இரவில் நான் அமைதியோடும் மனநிம்மதியோடும் உறங்க நல் உறக்கத்தை தாரும் .எனக்கு முன்னும் பின்னும் இடமும் வலமும் உம் வானத்தூதர்களை நிறுத்தி பாதுகாத்தருளும் புதிய நாளை காண செய்தருளும்.

ஆமென்.





இரவு ஜெபம், Night Prayer Tamil, உறங்குவதற்கு முன் ஜெபம், இரவு நேர நன்றியின் ஜெபம், Tamil Christian Prayer, அமைதியான உறக்க ஜெபம், தினசரி இரவு ஜெபம்.

Hashtags:
#இரவுஜெபம் #NightPrayer #TamilPrayer #DailyPrayer #ChristianPrayer #TamilJebam #JesusPrayer #PrayerBeforeSleep #GoodNightPrayer #இயேசுகிறிஸ்து #ஜெபமாலை #TamilChristian #PrayerInTamil #BedtimePrayer #NightBlessings

Comments

Popular posts from this blog

தூய குழந்தை இயேசுவின் தெரசாவை நோக்கி ஜெபம்

 மகிழ்வும் இனிமையும் கமழும் பிறரன்பு என்னும்  ஆன்மீக விருந்தை தம்மோடு வாழ்ந்தவர்க்கு வழங்கிய சிறுமலரே,  பிறர் துன்பம் விளைவித்த நேரத்திலும் அவர்களை  அன்போடு ஏற்றுக் கொண்ட நறுமலரே ,  உம்வழி நாங்கள் நடக்கவும், அன்புப் பணிகளில் நிலைத்து வாழவும்  எமக்கு அருள் புரிவீராக  குழந்தை இயேசுவை அதிகமாக நேசித்த சின்ன ராணியே,  மாசற்ற குழந்தை உள்ளங்களாய் நாங்கள் வளர அருள் தாரும் - ஆமென்

புனித அந்தோணியார் நவநாள் ஜெபம் (Tamil & English)

  அன்பும் அருளும் நிறைந்த புனித அந்தோணியாரே , இறைவனிடத்தில் மிகுந்த அருள் பெற்றவரே, எங்கள் தேவைகளிலும் துன்பங்களிலும் எங்களுக்கு துணையாக இருங்கள். தவறிப்போனவற்றை கண்டுபிடிக்க உதவும் அருளாளரே, எங்கள் வாழ்க்கையில் தொலைந்துபோன சமாதானம், நம்பிக்கை, சந்தோஷம் ஆகியவற்றையும் மீட்டருள வேண்டுகிறோம். எங்கள் குடும்பங்களை ஆசீர்வதித்து, நோயாளிகளுக்கு ஆரோக்கியமும், துயரப்படுவோருக்கு ஆறுதலும், வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்புகளும் அருளுங்கள். நாங்கள் கேட்கும் வேண்டுதல்களை இறைவனிடத்தில் எடுத்துரைத்து, அவருடைய சித்தத்தின்படி எங்களுக்கு அருள் கிடைக்கச் செய்யும். புனித அந்தோணியாரே, எங்களுக்காக ஜெபியுங்கள். ஆமென். Anbum arulum niraintha Punitha Anthoniyare, Iraivanidathil miguntha arul petravare, Engal thevaigalilum thunbangalilum Engalukku thunaiyaga irungal. Thavaripponavatrai kandupidikka uthavum Arulalare, Engal vaalkaiyil tholaindhupona Samathanam, nambikkai, santhosham agiyavatraiyum Meettarula vendugiroam. Engal kudumbangalai aasirvathithu, Noiyaligalkku aarokkiyamum, Thuyarappaduvoru...

இறை இரக்க மன்றாட்டு

  அன்பும், இரக்கமும் உள்ள இயேசுவே உம்மை அன்பு செய்வோர் வாழ்வை என்றும் தாங்குபவரே! அனைத்தையும் வாழ வைக்கும் அன்பின் திருஉருவே! பாவிகளின் நம்பிக்கையும், மீட்பும் ஆனவரே! மனு உரு எடுத்து எங்களில் ஒருவராக வாழ்ந்தவரே! இதோ, அசைக்க முடியாத முழு விசுவாசத்துடன் உமது திருத்தலத்தில் கூடியுள்ளோம். உமது இரக்கத்தின் ஊற்றிலிருந்து எங்களுக்கு அருள்தாரும். அனாதைகளையும், விதவைகளையும், வறியோரையும், பாவிகளையும், ஆதரவற்றோரையும், ஒடுக்கப்பட்டவர்களையும் உமது அன்புக் கரங்களால் வழி நடத்தும், உமது இரக்கப் பெருக்கத்தினால் எங்கள் அனைவரையும் காப்பாற்றும். அன்பின் திருஉருவே, ஒற்றுமையின் அடையாளமே, விண்ணக மருத்துவரே தீராத நோய், வறுமை, துன்ப துயரங்களினால் சோர்வுற்று ஒற்றுமை அமைதியில்லாமல் அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். ஓ. என் இனிய இயேசுவே பாவ மன்னிப்பு கோரி நான் விடும் கண்ணீரும் உம் மீது நான் கொண்டுள்ள அன்பும் என் அன்றாட உணவாய் இருப்பதாக. என் இதயம் உமது ஆலயமாக அமைவதாக. மரண வேளையில் என் ஆன்மாவை உமது நித்திய இளைப்பாற்றியில் ஏற்றுக்கொள்ளும்.                    ...