அற்புத குழந்தை இயேசு செபம்
அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்களது உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைக் திருப்பியருளுமாறு தாழ்ந்து பணிந்து வணங்கி வேண்டுகிறோம், இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏந்து உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளுமாறு உம்மை இறைஞ்சுகிறோம்.
(வேண்டிய வரத்தை இங்கு குறிப்பிடுக)
எங்களை வாட்டி வதைக்கும் துன்பத் துயரங்களையும், வேதனை சோதனைகளையும் நீக்கி உமது குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாடை ஏற்றருளும், அதனால் உமது ஆறுதலையும், ஆதரவையும் தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்தி போற்றுவோமாக.--- ஆமென்

Comments
Post a Comment