Skip to main content

இயேசுவை எதிர்நோக்கிய அன்னையிடம் செபம்

 


இரக்கம் சொறியும் தூய தோமையார் இரத்த மலையில் கோவில் கொண்டுள்ள எம் அன்னையே இயேசுவை எதிர்நோக்கிக் காத்திருந்த திருத்தாயே, உம்மை வாழ்த்திப்போற்றி வணங்குகின்றோம். திருமலைப்படியேறி உம் திருப்பீடம் வருவோரை அருள்மழை மடியமர்த்தி உம் மகன் சீடர் ஆக்கும் அம்மா!

திருவுளம் தாங்கும் கருவுளமே! அலகையின் சூழ்ச்சியால் அல்லல்படுவோரை உம்திரு கர்ப்பப்பேழைக்குள் ஒது காத்தருளும்! உம் திருவுருவம் தாங்கிய புனித தோமவின் உத்திரியத்தை அணிந்துகொண்டு இத்திருமலையை நோக்கி திருப்பயணம் வருவோரை அருள்வரங்களால் நிரப்பும். உம்திருவயிற்று ஆலயத்தில் மீட்பர் இயேசுவை உலகின் தெய்வமாய் உருவாக்கியது போல எம்மையும் உம் தெய்வீகக் கருவறையில் தாங்கி உம் மகன் விரும்பும் நல்லவர்களாய் உருவாக்கும்!

எங்கள் அனைவரின் குடும்பங்களிலும் நற்குணங்கள் வளர, குடும்ப அமைதி நிலைக்க, தம்பதியரிடையே பிரமாணிக்கம் வலுப்பெற, தேவ அழைத்தல் உருவாக, ஞானம், அறிவு, கல்வி மேம்பாடு கிடைக்க, வேலை வாய்ப்புப் பெருக, தொழில் வளர்ச்சி பெற, பொருளாதாரம் சிறக்க, மழைபொழிய, விவசாயம் செழிக்க, நிலம், வீடு அமைய, நல்லவரன், மங்கள நிகழ்வுகள், குழந்தைப்பேறு, சுகப்பிரசவம், விபத்தில்லா பயணம், நோயற்ற நல்வாழ்வு, கடனில்லா வாழ்வு இவ்வரங்களை எமக்கருளும்! திருமணத்துணை இழந்தோர், கைவிடப்பட்ட வறியவர்கள், தாய்தந்தையற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், கவனிப்பாரற்ற முதியவர்கள், கொடும் நோய்களினால் அவதியுறும் நோயாளிகள், நாட்டை, உறவினர்களைப் பிரிந்த வெளிநாட்டோர் அனைவரும் உம் திருமடி சுகம் பெற பரிந்துபேசும். குருக்கள், துறவறத்தார் புனித வாழ்வு வாழ, உண்மை ஆன்மீகம் தழைக்க, உலக அமைதி, மனித நேயம், மத ஒற்றுமை, சமூக நீதி ஓங்க மன்றாடும்!

நீர் எதிர்நோக்கிக் காத்திருந்த ஆண்டவர் இயேசுவை நாள்தோறும் எம்வாழ்வில் ஆவலுடன் எதிர்நோக்கி உம்மைப்போல் நாங்களும் இறைத்திருவுளத்திற்கு ஆகட்டும் என்று சொல்ல கற்றுத்தாரும்!

தூய தோமா செதுக்கிய கற்சிலுவையில், இரத்தம் சொரிய வைத்து உமது அருள் பிரசன்னத்தை வெளிப்படுத்திய இறைவா! இத்திருமலையை உலகமனைத்திற்கும் நம்பிக்கையின் இல்லமாக்கி ஆசீர்வதிப்பீராக! ஆமென்.

Comments

Popular posts from this blog

Daily tamil prayer

  வேதத்திலே நாம் வாசிக்கிறோம் யோவான் 10ஆம் அதிகாரம் 27ஆம் வசனத்திலே என் ஆடுகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் எனக்கு பின் செல்கிறது என்று கர்த்தர் சொல்கிறார். ஆம் பிரியமானவர்களே நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆடுகள் நாம் அவருடைய சத்தத்துக்கு செவி கொடுக்கும்போது ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையிலே ஆசீர்வாதங்கள் நம்முடைய வாழ்க்கையில் இன்றைக்கு யாருடைய சத்தத்துக்கு செவி கொடுக்கிறோம் இயேசு கிறிஸ்துவின் சத்தத்துக்கு செவி கொடுக்கிறோமா அல்லது அந்நிய சத்தத்துக்கு செவி கொடுக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்ப்போம் அல்லேலூயா நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் போது நமக்கு அவர் நித்திய ஜீவனை வைத்திருக்கிறார் ஆம் பிரியமானவர்களே ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவின் சத்தத்திற்கு செவி கொடுப்போம் நித்திய ஜீவனை நாம் சுதந்தரித்து கொள்வோம் அல்லேலூயா இந்த புதிய நாளுக்காக தேவ சமூகத்திலே தாழ்த்தி ஜெபிப்போம் ஜெபம் எங்களை அதிகமாய் நேசிக்கிற எங்கள் அன்பின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் அப்பா இந்த புதிய நாளை காண செய்த கிருபைக்காக நன்றி அப...

புனித தோமையார் மன்றாட்டு மாலை | st.thomas prayer

ஆண்டவரே இரக்கமாயிரும் - 2 கிறிஸ்துவே இரக்கமாயிரும் - 2 ஆண்டவரே இரக்கமாயிரும் - 2 கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் - 2 கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும் -2 விண்ணகத்திலிருக்கும் தந்தையே இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகத்தை மீட்ட சுதனே இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும் தூய ஆவியாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும் தூய தோமாவே (எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்) 1. ஆண்டவர் இயேசுவின் பன்னிரு சீடருள் ஒருவரான தூய தோமாவே 2. நற்செய்தி போதிக்கும் பேறுகொண்ட தூய தோமாவே 3. ஆண்டவர் இயேசுவை ஆவலாகவே தொடர்ந்த நல் தூய தோமாவே 4. கிறிஸ்துவுக்காக குருதி சிந்தி வேதசாட்சியான தூய தோமாவே 5. என் ஆண்டவரே என் கடவுளே என்று மொழிந்த நல் தூய தோமாவே 6. இயேசுவின் காயங்கள் தொடுகின்ற பெரும் பேறுகொண்ட தூய தோமாவே 7. கிறிஸ்துவின் உண்மை விசுவாச வாழ்வின் மாதிரியான தூய தோமாவே 8. நற்செய்தி போதிக்கும் ஆர்வம் கொண்டிட அழைத்த நல் தூய தோமாவே 9. விசுவாசப் பொருளை இயேசுவிடம் நிறைவாக அறிந்த தூய தோமாவே 10. இறைவனில் பேரன்பு கொள்வதே பெரும் செல்வம் என்ற தூய தோமாவே 11. இந்திய நாட்டின் ஒளியாக தினமும் திகழும் நல் தூய தோமாவ...

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் tamil RC songs

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம்  அவர் பலியினில் கலந்திட  அவர் ஒளியினில் நடந்திட  சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்  தோள்களில் நம்மை தாங்குவார்  துயரினில் அவர் தேற்றுவார்  சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார்  ஆவியால் நம்மை நிரப்புவார்  அமைதியை என்றும் அருளுவார்  ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்  விடியலின் கீதமாக முழங்குவார்  விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்  வாருங்கள்..........