இந்தியாவின் திருத்தூதரே, புனித தோமையாரே. என் ஆண்டவரே! என் கடவுளே! என்று விசுவாசத்தை அறிக்கையிட்டவரே, எம் இந்திய நாட்டு மக்களுக்கு அன்புடன் நற்செய்தி அறிவித்து, இத்திருமலையில் கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்திய உம்மை வணங்குகிறோம். நீர் அறிவித்த இயேசு ஆண்டவரை நாங்களும் அறிவிக்கவும், நீர் அறிமுகம் செய்த அன்னை மரியாளை ஆர்வமுடன் நாடி வரவும், கிறிஸ்துவின் மீது நாங்கள் ஆழ்ந்த பற்றுக்கொள்ளவும், அவரை ஆவலோடு பின்பற்றி, அவரது சாட்சிகளாக வாழவும் சக்தியை பெற்றுத்தாரும். எம் வாழ்விலே வரும் துன்ப துயரங்களை தைரியத்தோடு எதிர்கொள்ள, எம் துன்ப நேரங்களில் எம்முடன் இருந்து எமக்காக பரிந்து பேசியருளும். உமது வல்லமைமிக்க பரிந்துரையால் என்னையும் என் குடும்பத்தையும் நன்மைகளால் நிரப்பும். இங்கு கூடி இருப்போர் அனைவரின் தேவைகளும் நிறைவேற மன்றாடும். எங்கள் பாதுகாவலரான புனித தோமையாரே! எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும். ஆமென்.

Comments
Post a Comment