ஆண்டவரே இரக்கமாயிரும் - 2
கிறிஸ்துவே இரக்கமாயிரும் - 2
ஆண்டவரே இரக்கமாயிரும் - 2
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் - 2
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும் -2
விண்ணகத்திலிருக்கும் தந்தையே இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகத்தை மீட்ட சுதனே இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும் தூய ஆவியாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்
தூய தோமாவே (எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்)
1. ஆண்டவர் இயேசுவின் பன்னிரு சீடருள் ஒருவரான தூய தோமாவே
2. நற்செய்தி போதிக்கும் பேறுகொண்ட தூய தோமாவே
3. ஆண்டவர் இயேசுவை ஆவலாகவே தொடர்ந்த நல் தூய தோமாவே
4. கிறிஸ்துவுக்காக குருதி சிந்தி வேதசாட்சியான தூய தோமாவே
5. என் ஆண்டவரே என் கடவுளே என்று மொழிந்த நல் தூய தோமாவே
6. இயேசுவின் காயங்கள் தொடுகின்ற பெரும் பேறுகொண்ட தூய தோமாவே
7. கிறிஸ்துவின் உண்மை விசுவாச வாழ்வின் மாதிரியான தூய தோமாவே
8. நற்செய்தி போதிக்கும் ஆர்வம் கொண்டிட அழைத்த நல் தூய தோமாவே
9. விசுவாசப் பொருளை இயேசுவிடம் நிறைவாக அறிந்த தூய தோமாவே
10. இறைவனில் பேரன்பு கொள்வதே பெரும் செல்வம் என்ற தூய தோமாவே
11. இந்திய நாட்டின் ஒளியாக தினமும் திகழும் நல் தூய தோமாவே
12. இயேசுவுக்காக அனைத்திலும் பணிந்து மகிழ்ந்த நல் தூய தோமாவே
13. ஈட்டியினாலே வதையுற்று விண்ணில் வாழும் தூய தோமாவே
14. உம் திருப்பாதம் பதிந்த பாரதத்தை மனந்திருப்பும் தூய தோமாவே
15. இறையன்னையின் ஓவியத்தை கொண்டு வந்த தூய தோமாவே
16. அன்னையின் துணைகொண்டு போதித்த தூய தோமாவே
17. நீர் போகுமிடம் யாதென்று இறைவனிடம் கேட்ட தூய தோமாவே
18. உயிர்த்த இயேசுவின் தரிசனம் கண்ட தூய தோமாவே
19. இயேசுவின் விலாவினைத் தொட்டுணரவே பெரும் ஆவல் கொண்ட தூய தோமாவே
20.உமது உடலின் திருப்பண்டம் தனிலே அருள் பொழியும் தூய தோமாவே
21. நீர் உருகொடுத்த திருச்சிலுவையிலே செந்நீர் வார்த்த தூய தோமாவே
22.இயேசுவே வழியும் உண்மையும் உயிரும் என்றுணர்ந்த தூய தோமாவே
23.வாருங்கள் செல்வோம் இயேசுவுடன் மடிவோம் என அழைத்த நல் தூய தோமாவே
24.கிறிஸ்தவ விசுவாசம் வளம் பெறவே தினம் உழைத்த நல் தூய தோமாவே
25.திருமலையில் அருள்வரங்களைப் பொழியும் இரத்த சாட்சி தூய தோமாவே
உலகின் பாவங்கள் போக்குகின்ற இறைவனின் செம்மறியே எங்கள் பாவங்களை பொறுத்தருளும்...
எங்கள் மன்றாட்டை கேட்டருளும்...
எங்கள் மேல் இரக்கமாயிரும்...
செபிப்போமாக:- அன்பின் இறைவா, இந்திய நாட்டிற்கு உம் பெரியஆசீர்வாதமாய் கொடுத்த அற்புத திருத்தூதர் தூய தோமாவுக்காகவும், அவர் வாழ்ந்த இரத்த மலைக்காகவும் நன்றி கூறுகின்றோம். தூய தோமா காட்டிய வழியில் நாங்கள் வாழ்ந்து, உமது இரக்க மழையில் நனைய அருள்தாரும். ஆமென்

Comments
Post a Comment