மகிழ்வும் இனிமையும் கமழும் பிறரன்பு என்னும்
ஆன்மீக விருந்தை தம்மோடு வாழ்ந்தவர்க்கு வழங்கிய சிறுமலரே,
பிறர் துன்பம் விளைவித்த நேரத்திலும் அவர்களை
அன்போடு ஏற்றுக் கொண்ட நறுமலரே,
உம்வழி நாங்கள் நடக்கவும், அன்புப் பணிகளில் நிலைத்து வாழவும்
எமக்கு அருள் புரிவீராக
குழந்தை இயேசுவை அதிகமாக நேசித்த சின்ன ராணியே,
மாசற்ற குழந்தை உள்ளங்களாய் நாங்கள் வளர அருள் தாரும்
- ஆமென்

Comments
Post a Comment