புனித சூசையப்பரே! உமது அடைக்கலம் மிகவும் மகத்தானது; வல்லமை மிக்கது; இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. எனவே, எனது ஆசைகளையும் எண்ணங்களையும் உமது அடைக்கலத்தில் வைக்கிறேன்.
உமது வல்லமை மிகுந்ந பரிந்துரையால் உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக, மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும் ஆராதனையும் செலுத்தக் கடவேன்.
புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக் கரங்களில் உறங்கும் இயேசுவையும் எக்காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம் மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவரை என் பொருட்டு, உம் மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படிக் கூறும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலரே! எங்களுக்காக மன்றாடும்.
-ஆமென்.
Umathu vallamai migundha parindhuraiyaal umathu thirumaganum engal aandavarumaagiya Yesuv idam engalukku thevaiyaana ella aanma nalangalaiyum pettrutthaarum. Idhan vazhiyaaga, maru ulagil umakkulla aatralai potri ellaam valla thandhaiyaagiya Iraivanukku nandriyum aaraadhanaiyum seluththa kadaven.
Punitha Soosaiyappare! Ummaiyum um thiru karangalil urangum Yesuvaiyum ekkaalamum enni poorippadaiya thayangiyadhillai. Iraivan um maarbil saayndhu thoongum velaiyil avarai thondharavu seiyya virumbavillai. Avarai en poruttu, um maarbodu serththu anaiththuk kollum. En peyaraal avarukku nettriyil muththam idum. Naan irakkum tharunathil andha muththathai enakkuth tharumpadi koorum.
Mariththa visuvaasigalin aanma kaavalare! Engalukkaaga mandraadum.
Aamen.

Comments
Post a Comment