Skip to main content

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் tamil RC songs

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம்  அவர் பலியினில் கலந்திட  அவர் ஒளியினில் நடந்திட  சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்  தோள்களில் நம்மை தாங்குவார்  துயரினில் அவர் தேற்றுவார்  சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார்  ஆவியால் நம்மை நிரப்புவார்  அமைதியை என்றும் அருளுவார்  ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்  விடியலின் கீதமாக முழங்குவார்  விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்  வாருங்கள்..........

புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் ஜெபம்|Punitha Velankanni Arokkiya Annaikku Navanaal Jebam

 

புனித மரியே, மாசில்லா கன்னிகையே! யேசுவின் தாயாக மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவளே! துன்ப படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் அன்னையே! உமது தெய்வீக திருமகனின் அளவற்ற வல்லமையை நம்பி, உமது வல்லமை நிறைந்த மன்றாட்டுகளில் உறுதி கொண்டு, இந்த நவநாளின் போது நான் கேட்கும் மன்றாட்டுக்கள் தெய்வ திருவுளத்திற்கு ஏற்றவையானால் உம் திருமகன் யேசுவிடம் பரிந்து பேசி என் மன்றாட்டுகளை எனக்கு நிறைவேற்றி தாரும்.


இறைவனின் மாட்சி பெற்ற அன்னையே "அருள் நிறைந்தவள்" என்று அன்று அதி தூதர் கபிரியேல் சொல்லும் போது அவர் கொண்டிருந்த அதே பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துக்களை கூறுகிறேன்; அன்புடன் ஏற்றுகொள்ளும்.


அருள் நிறை மரியே வாழ்க...


வருந்துவோருக்கு ஆறுதலே! நான் இப்போது கேட்ட மன்றாட்டுக்கள் நிறைவேறுமாறு எனது நற்செயல்களையும் நான் ஏற்கும் துன்பங்களையும் ஒறுத்தல் முயற்சிகளையும் உமக்கு ஒப்பு கொடுக்கிறேன். உமது திருமகனிடம் உம் அடியான் எனக்காக பரிந்து பேசி என் மன்றாட்டுகளை அடைந்து தந்தருளும் வேளாங்கண்ணி மாதாவே. ஆமென்


புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

- ஆமென் 

Punitha Mariye, Maasillaa Kannigaiye! Yesuvin Thaayaaga Moovoru Kadavulaal Therinthu Kollappattavale! Thunba Padubavargalukku Aaruthal Alikkum Annaiye! Umadhu Dheiveega Thirumaganin Alavatra Vallamaiyai Nambi, Umadhu Vallamai Niraintha Manraattugalil Urudhi Kondu, Indha Navanaalin Podhu Naan Ketkum Manraattukkal Dheiva Thiruvulaththirku Yetravayaanal Um Thirumagan Yesuvidam Parindhu Pesi En Manraattugalai Enakku Niraivetri Thaarum.


Iraivanin Maatchi Pettra Annaiye “Arul Nirainthaval” Endru Andru Adhi Thoodhar Kabriyel Sollum Podhu Avar Kondirundha Adhe Panivu Vanakkaththudan Naanum Ivvaazhththukkalai Koorugiren; Anbudan Yetrukkollum.


Arul Nirai Mariye Vaazhga...


Varundhuvoorukku Aaruthale! Naan Ippodhu Ketta Manraattukkal Niraiverumaaru Enadhu Narseyalgalaiyum Naan Yetrukkollum Thunbangalaiyum Oruththal Muyarchchigalaiyum Umakku Oppu Kodukkiren. Umadhu Thirumaganidam Um Adiyaan Enakkaaga Parindhu Pesi En Manraattugalai Adaindhu Thandharulum Velankanni Maadhaave. Aamen.


Punitha Velankanni Arokkiya Annaiye! Engalukkaaga Vendikkollum!

+Aamen.

Comments

Popular posts from this blog

தூய குழந்தை இயேசுவின் தெரசாவை நோக்கி ஜெபம்

 மகிழ்வும் இனிமையும் கமழும் பிறரன்பு என்னும்  ஆன்மீக விருந்தை தம்மோடு வாழ்ந்தவர்க்கு வழங்கிய சிறுமலரே,  பிறர் துன்பம் விளைவித்த நேரத்திலும் அவர்களை  அன்போடு ஏற்றுக் கொண்ட நறுமலரே ,  உம்வழி நாங்கள் நடக்கவும், அன்புப் பணிகளில் நிலைத்து வாழவும்  எமக்கு அருள் புரிவீராக  குழந்தை இயேசுவை அதிகமாக நேசித்த சின்ன ராணியே,  மாசற்ற குழந்தை உள்ளங்களாய் நாங்கள் வளர அருள் தாரும் - ஆமென்

புனித அந்தோணியார் நவநாள் ஜெபம் (Tamil & English)

  அன்பும் அருளும் நிறைந்த புனித அந்தோணியாரே , இறைவனிடத்தில் மிகுந்த அருள் பெற்றவரே, எங்கள் தேவைகளிலும் துன்பங்களிலும் எங்களுக்கு துணையாக இருங்கள். தவறிப்போனவற்றை கண்டுபிடிக்க உதவும் அருளாளரே, எங்கள் வாழ்க்கையில் தொலைந்துபோன சமாதானம், நம்பிக்கை, சந்தோஷம் ஆகியவற்றையும் மீட்டருள வேண்டுகிறோம். எங்கள் குடும்பங்களை ஆசீர்வதித்து, நோயாளிகளுக்கு ஆரோக்கியமும், துயரப்படுவோருக்கு ஆறுதலும், வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்புகளும் அருளுங்கள். நாங்கள் கேட்கும் வேண்டுதல்களை இறைவனிடத்தில் எடுத்துரைத்து, அவருடைய சித்தத்தின்படி எங்களுக்கு அருள் கிடைக்கச் செய்யும். புனித அந்தோணியாரே, எங்களுக்காக ஜெபியுங்கள். ஆமென். Anbum arulum niraintha Punitha Anthoniyare, Iraivanidathil miguntha arul petravare, Engal thevaigalilum thunbangalilum Engalukku thunaiyaga irungal. Thavaripponavatrai kandupidikka uthavum Arulalare, Engal vaalkaiyil tholaindhupona Samathanam, nambikkai, santhosham agiyavatraiyum Meettarula vendugiroam. Engal kudumbangalai aasirvathithu, Noiyaligalkku aarokkiyamum, Thuyarappaduvoru...

இறை இரக்க மன்றாட்டு

  அன்பும், இரக்கமும் உள்ள இயேசுவே உம்மை அன்பு செய்வோர் வாழ்வை என்றும் தாங்குபவரே! அனைத்தையும் வாழ வைக்கும் அன்பின் திருஉருவே! பாவிகளின் நம்பிக்கையும், மீட்பும் ஆனவரே! மனு உரு எடுத்து எங்களில் ஒருவராக வாழ்ந்தவரே! இதோ, அசைக்க முடியாத முழு விசுவாசத்துடன் உமது திருத்தலத்தில் கூடியுள்ளோம். உமது இரக்கத்தின் ஊற்றிலிருந்து எங்களுக்கு அருள்தாரும். அனாதைகளையும், விதவைகளையும், வறியோரையும், பாவிகளையும், ஆதரவற்றோரையும், ஒடுக்கப்பட்டவர்களையும் உமது அன்புக் கரங்களால் வழி நடத்தும், உமது இரக்கப் பெருக்கத்தினால் எங்கள் அனைவரையும் காப்பாற்றும். அன்பின் திருஉருவே, ஒற்றுமையின் அடையாளமே, விண்ணக மருத்துவரே தீராத நோய், வறுமை, துன்ப துயரங்களினால் சோர்வுற்று ஒற்றுமை அமைதியில்லாமல் அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். ஓ. என் இனிய இயேசுவே பாவ மன்னிப்பு கோரி நான் விடும் கண்ணீரும் உம் மீது நான் கொண்டுள்ள அன்பும் என் அன்றாட உணவாய் இருப்பதாக. என் இதயம் உமது ஆலயமாக அமைவதாக. மரண வேளையில் என் ஆன்மாவை உமது நித்திய இளைப்பாற்றியில் ஏற்றுக்கொள்ளும்.                    ...